இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தணும்!

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 10 ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தணும்!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - இன்று உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடும். கடும் முயற்சிக்கு பின்னரும் முக்கிய வேலையை முடிக்க முடியாததால், நம்பிக்கை குறையலாம். எக்காரத்திற்காகவும் தன்னபிக்கையை இழக்க வேண்டாம். விரைவில் அனைத்தும் கைகூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வர வலுவான வாய்ப்புள்ளது. இன்று சிறு வணிகர்கள் பயனடையலாம். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம். இத்தகைய சூழலில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம், கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

ரிஷபம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களது கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு இன்று பெரிய வாய்ப்பு கிடைக்கும். வரவு திருப்தியளிக்கும். இன்றைய தினம் நிதி பரிவர்த்தனைகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். உடல்நலத்தில் திடீர் பாதிப்பு ஏற்படக்கூடும். இன்று பலவீனமாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் இரவு 8:18 மணி வரை

மிதுனம் - இன்று உங்கள் பொருளாதார நிலையில் சரிவை சந்திக்கலாம். உங்கள் நிதி முயற்சிகள் தோல்வியடையக்கூடும். பண விவகாரத்தால் கவலை அதிகரிக்கும். அதனால் எதிர்காலம் பற்றியும் கவலைப்படுவீர்கள். இத்தகைய சூழலில், தைரியத்தை கைவிடாமல், கடுமையால் உழைக்க வேண்டும். அப்போது, எதிர்கால கனவுகளை நிறைவேற்ற முடியும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் எதிர்பார்ப்பை அறிந்து செயல்பாட்டால், ஆதரவையும், பாராட்டையும் பெற்றிடலாம். கிடைக்கும் வாய்ப்புகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கடகம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளில் மன அமைதி கெடக்கூடும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்ய முயற்சிக்கவும். வர்த்தகர்கள் இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். அன்புக்குரியவர்களை மகிழ்ச்சிப்படுத்த அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சரியான புரிதல் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5:30 மணி வரை

சிம்மம் - உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் பிறரை தலையிட அனுமதிக்காதீர்கள். அதனால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள், இன்று தங்களது வேலையில் சில தடங்கல்களை சந்திக்கலாம். அதனால் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. வர்த்தகர்கள் இன்று நன்கு பயனடையலாம். பண நிலைமை நன்றாக இருக்கும். கடன்களை அடைக்க விரும்பினால், செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று வீட்டு உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கலாம். உடல்நிலை பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

கன்னி - இன்றைய தினம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. இதனால், தடைப்பட்ட அனைத்து வேலைகளையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். உங்களது கடின உழைப்பிற்கான பலனாக பதவி உயர்வைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்று சில கூடுதல் வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். நீண்ட கால நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால், மன உறுதி அதிகரிக்கும். உடல்நலத்தை பற்றி பேசினால், கண்களை கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம் - இன்று நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கப்போகிறது. உத்தியோகஸ்தர்கள் இன்று பொறுமையாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உயர் அதிகாரிகளிடம் வெளிப்படையாக பேசுங்கள். அப்போது தான் பிரச்சனை விரைவில் நீங்கும். உங்கள் நிதி நிலைமையை பற்றி பேசினால், இன்று பணம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை

விருச்சிகம் - இன்று மன அமைதியை பெறுவதுடன், மனதளவில் வலுவாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்களது முக்கியமான பணிகளை மிகுந்த கவனத்துடன் முடிக்க முயற்சிக்கவும். நீங்கள் ஏதேனும் பெரிய திட்டத்தில் பணிபுரிந்தால், உங்கள் பணி தொடர்பான ரகசியங்களைப் பற்றி அதிகம் பேச வேண்டாம். வர்த்தகர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். வங்கியில் கடன் வாங்க முயற்சிப்பவர்கள், இன்று நற்செய்தியைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் 12:50 மணி வரை

தனுசு - அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இன்று சரியான முறையில் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். சரியான நேரத்ததிற்கு அலுவலகத்தை அடைய முயற்சிக்கவும். விதிமுறைகளை மீறினால், பெரும் சிக்கலில் சிக்கக்கூடும். வர்த்தகர்கள் இன்று எதிர்ப்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். மந்தமான வணிகம் மாறி, நிதி ரீதியாக பயனடையலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் மாறிவரும் நடத்தையால், பிளவு ஏற்படலாம். குழந்தைகளின் கல்வி தொடர்பான பெரிய முடிவுகளை எடுக்கலாம். உடல்நலத்தில், கால் தொடர்பான பிரச்சனையை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

மகரம் - இன்று நீங்கள் திடீரென்று சில பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். வர்த்தகர்கள் இன்று அதிக பயணம் செய்ய வேண்டியிருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். நிதி சார்ந்த அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடியும். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்க திட்டமிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். இதனால் இருவருக்கும் இடையிலான பிளவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை

கும்பம் - இன்று உங்கள் உடல்நலம் குறித்த கவலை அதிகரிக்கும். வயிற்று பிரச்சனை, இரைப்பை, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, இன்று காரமான அல்லது வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேலை முன்னணியில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் கடின உழைப்பு பலனளிக்க போகிறது. முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள், பெரிய முதலீட்டை செய்வதற்கு சாதகமான நாள். குடும்ப வாழ்க்கையில் இன்று சில சலசலப்புகள் ஏற்படலாம். வீட்டு உறுப்பினர்களிடையே உள்ள வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இன்று மாலை உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மீனம் - இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையைப் பற்றிய குழப்பத்தை நீக்க அனுபவசாலிகளை அணுகுவது நல்லது. இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, விடாமுயற்சியுடன் படிக்கவும். வேலை முன்னணியில், இன்று சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபர் என்றால், இன்று எந்த பெரிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நன்றாக இருக்கும். செலவுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உடல்நலம் பற்றி பேசும்போது, தசை வலி காரணமாக அவதிப்படுவீர்கள். அதிகப்படியான எடை தூக்குவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் மதியம் 1 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0