இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 13 ஆம் செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் நன்கு நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அனைத்து கவலைகளையும் உங்களால் நீக்க முடியும். இன்று வேலை முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உங்கள் பணியின் வேகத்தை அதிகம் கவனிக்க வேண்டும். வணிகர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக உங்கள் பணி உணவகத்துடன் தொடர்புடையதாக இருந்தால், இன்று உங்கள் வேலையில் சில சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார முன்னணியில், பெரிய முன்னேற்றங்கள் ஏற்படலாம். முன்னோர் சொத்து தொடர்பான எந்த நல்ல செய்தியையும் பெறலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இன்று மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ரிஷபம் - உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இன்றைய திட்டத்தைக் கெடுக்கும். ஓய்வெடுப்பதில் நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் சிரமம் அதிகரிக்கக்கூடும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் தங்கள் நடத்தையை அலுவலகத்தில் சரியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். பொறுமையாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். விவாதம் காரணமாக நீங்கள் இழப்பை சந்திப்பீர்கள். தானிய வியாபாரிகள் நிதி ரீதியாக பயனடையலாம். ஆடை வியாபாரிகளும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்புவோராக இருந்தால், உங்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் உடன்படலாம். இன்று பொருளாதார முன்னணியில் கலவையான முடிவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை
மிதுனம் -வேலையைப் பற்றிப் பேசும்போது, உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையை கவனமாகச் செய்ய வேண்டும். குறிப்பாக உங்கள் முதலாளி ஏதேனும் பணியைக் கொடுத்திருந்தால், அதை நன்கு கவனத்தோடு முடிக்கவும். வணிகர்கள் இன்று திடீரென்று பயணிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். பெற்றோருடன் இன்று சிறந்த நேரம் செலவிடலாம். தந்தையிடமிருந்து நிதி நன்மை சாத்தியமாகும். உங்கள் வாழ்க்கைத் துணையை மரியாதையுடன் நடத்த வேண்டும். சிறிய விஷயங்களுக்காக வாதிடுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
கடகம் - குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் இருந்து இன்று விடுபடலாம். இறக்குமதி ஏற்றுமதி வணிகத்தில் இருப்பவர்களுக்கு இன்று ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் எந்தவொரு கடினமான பணியையும் எந்த தடையும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிக்க முடியும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று தசைகள் தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் இருக்கலாம். எனவே, இன்று கனமான எந்தவொரு பொருளை தூக்குவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12 மணி வரை
சிம்மம் - பதவி உயர்வு எதிர்நோக்கி காத்திருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் திறமையை காட்ட ஒரு பொன்னான வாய்ப்பைப் பெறலாம். வணிக ரீதியாக இன்று நீங்கள் மிகவும் மன அழுத்தமான நாளாக இருக்கும். சிக்கிய வழக்குகள் பெரிதாக வாய்ப்புள்ளது. நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. ஆரோக்கியமாக இருக்க நீங்கள் சமூக தூரத்தில் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
கன்னி - அலுவலகத்தில், முக்கியமான வேலையில் திடீர் தடைகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பீர்கள். விரைவில் உங்கள் பிரச்சனை உயர் அதிகாரிகளின் உதவியுடன் முடிவடையும். வணிகர்கள் பணத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று நீங்கள் ஒரு பெரிய நிதி பரிவர்த்தனை செய்தால், முழு எச்சரிக்கையுடன் இருக்கவும். இல்லையெனில், இழப்புகள் அதிகரிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, வீட்டுப் பொறுப்புகள் அதிகரிப்பதால் இன்று சற்று சிரமப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். பணத்தைப் பற்றிப் பேசினால், பெரிய அளவில் செலவுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை
துலாம் - நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். அலுவலக சூழல் இன்று மிகவும் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சிறு வணிகர்கள் நல்ல பொருளாதார நன்மையைப் பெற முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தால், அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இன்று, வாழ்க்கைத் துணையின் மனநிலை சரியாக இருக்காது. உங்களுக்கு பிடித்த இடத்திற்கு அவருடன் சுற்றுலாவிற்கு செல்லலாம். உடல்நலம் பற்றி பேசினால், இன்று தோல் தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை
விருச்சிகம் - நீங்கள் இன்று ஒரு வறியவருக்கு நன்கொடை அளித்தால், அது உங்களுக்கு மிகவும் நல்லது. இன்று பணத்தின் அடிப்படையில் மிகவும் புனிதமான நாளாக இருக்கும். திடீர் பண வரவு உங்கள் நிதி சிக்கலை முடிவுக்குக் கொண்டுவரும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் மிகவும் வேடிக்கையாக பொழுதை கழிப்பீர்கள். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள், இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
தனுசு - புதிதாக தொழில் தொடங்கியோல் நல்ல லாபம் கிடைக்க வேண்டுமெனில், பொறுமையுடன் பணியாற்ற வேண்டும். அவசரம் அவஸ்தையில் தான் முடியும். நேரம் வரும் போது விஷயங்கள் சாதகமானதாக மாறும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், வரவிருக்கும தேர்வில் அலட்சியமாக இருக்கக்கூடாது. நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். திருமண வாழ்க்கையில் நிலைமைகள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியமாக இருக்க, தினமும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
மகரம் - இன்று இளைய உறுப்பினர்களுடனான உங்கள் உறவை வலுப்படுத்த முயற்சி செய்வது நல்லது. திருமண வாழ்க்கையில் அனைத்தும் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் நல்லிணக்கம் இருக்கும். பணத்தின் அடிப்படையில் இழப்பு சாத்தியமாகும். நீங்கள் சிந்திக்காமல் நிதி முடிவுகளை எடுத்தால், வரும் நாட்களில், உங்கள் மீதான அழுத்தம் கணிசமாக அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். இன்று அலுவலகத்தில், மிகச்சிறிய பணிகளை கூட சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். திடீரென்று உங்கள் முதலாளி உங்கள் செயல்களை மதிப்பாய்வு செய்யலாம். மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக ஆரோக்கிய குறைவு சாத்தியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை
கும்பம் - உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருங்கள். இரும்பு வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். ஒப்பனை வர்த்தகர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் இயல்பை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினருடன் சண்டை இருந்தால், இன்று உங்களிடையே எல்லாம் சரியாகிவிடும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். நீங்கள் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், இன்று கடன் வாங்க நினைத்தால், அதைத் தவிர்க்கவும். உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
மீனம் - உங்களுக்கு ஏதேனும் கல்லீரல் நோய் இருந்தால், இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். வர்த்தகர்கள் மந்தநிலையை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் சில வேலைகள் திடீரென்று தவறாக நடக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும. சில பழைய உறவினர்களை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் இன்று வீண் விவாதம் ஏற்படலாம். ஆனால் விரைவில் எல்லாம் சாதாரணமாக மாறும. உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை இன்று நீங்கள் உணர்வீர்கள். பண நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை இன்று கட்டுப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை