இந்த 3 ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் இன்றைய தினம் சில ஏமாற்றங்களை சந்திக்கக்கூடும்!

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றி பார்க்கலாம். 

இந்த 3 ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் இன்றைய தினம் சில ஏமாற்றங்களை சந்திக்கக்கூடும்!

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். டிசம்பர் 18ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம் - வேலை முன்னணியில் இன்று நல்ல நாள். உங்களது செயல்திறன் அதிகரிப்பதோடு, உங்களது எல்லா வேலைகளையும் சிறப்பாக கையாளுவீர்கள். இன்று நீங்கள் ஒரு முக்கியமான பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். பல நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சிறிது நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மறுபுறம், காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் உருவாகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: இரவு 9:20 முதல் 10 மணி வரை

ரிஷபம் - அலுவலகத்தில் இன்றைய தினம் நன்றாக இருக்கும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள முடியும். உங்களது துறை சார்ந்த அல்லது உயர் பதவியில் உள்ள நபரை சந்திக்க வாய்ப்பு கிட்டும். வியாபாரிகள், வணிகம் சார்ந்த முடிவுகளை எடுக்க இன்று சிறந்த நாள். பண வரவு திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆசீர்வாரம் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். உடல்நலம் பற்றி பேசினால், ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும். அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மிகுந்த கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பதோடு, வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். இன்றைய தினம, முக்கிய பிரச்சனை குறித்து பெற்றோருடன் விவாதிக்கலாம். அலுவலகத்தில், மிகுந்த கவனத்தோடு பணிகளை செய்து முடிக்கவும். வணிகர்களுக்கு இன்று முக்கியமான நாள். தொழிலை வளர்க்க திட்டமிட்டிருந்தால் இன்று நற்செய்தியை பெறலாம். ஆரோக்கிய விஷயத்தில் சிறு கவலைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 முதல் 5 மணி வரை

கடகம் - காதல் வாழ்க்கையில் மந்தமான நிலையை நீடிக்கும். அன்புக்குரியவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடையலாம். வாழ்க்கைத் துணையிடம் பொய் கூறாமல் இருந்தால், பெரிய சண்டைகள் உருவாகாமல் தவிர்க்கலாம். வியாபாரிகள் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்கள் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

சிம்மம் - பணத்தின் அடிப்படையில் இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் என்று சொல்லலாம். குடும்பத்தாரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குறைந்த முயற்சியில் நல்ல வரவை சம்பாதிக்க முடியும். நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பதன் மூலம் உங்களுக்கு நிதி நன்மை கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் நட்பை பெறுவீர்கள். சக ஊழியர்களும் இன்று உங்களை பாராட்டுவார்கள். வர்த்தகர்ள் இன்று நல்ல வணிக சலுகையை பெறலாம். வீட்டின் சூழ்நிலை இன்று சரியாக இருக்காது. பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகலாம். அவர்களை புரிந்து நடந்துக்கொள்வதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம். உடல்நலத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை

கன்னி - பண பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இருப்பினும், பெரிய நிதி நெருக்கடியிலிருந்து விலகி இருக்க வேண்டுமெனில், வீண் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குடும்பத்தாரின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிக நேரம் செலவிடுவதன் மூலம் காதல் அதிகரிக்கும். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 10:10 மணி வரை

துலாம் - அலுவலக விஷயங்கள் இன்று உங்களுக்கு எதிராக மாறக்கூடும். உங்களது செயல்திறனால் உயர் அதிகாரிகள் திருப்தி அடையாமல் போகலாம். உங்கள் தவறுகள் சுட்டிக்காட்டப்படலாம். இத்தகைய சூழலில், மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். வர்த்தகர்கள் தேவையற்ற விவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுப்பெறும். நிதி சார்ந்த முடிவுகளை கவனமாக எடுக்கவும். உடல்நிலை பலவீனமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை

விருச்சிகம் - திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத் துணையால் இன்றைய தினம் கடினமாகலாம். தேவையில்லா விவாதம், மன அழுத்தத்தை உண்டாக்கலாம். இதனால், அலுவலக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உடன்பிறந்தோரின் உதவிடன், முக்கிய பணி ஒன்றை முடிக்க முடியும். அன்புக்குரியவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். தேவையற்ற காரியங்களை ஒதுக்குவதன் மூலம், அவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பை உருவாக்க முடியும். பொருளாதார முன்னணியில் இன்று நல்ல முன்னேற்றம் காண முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

தனுசு - உங்களது வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பிற்கான பலனைப் பெற வாய்ப்புள்ளது. பதவி உயர்விற்கு வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். பண வரவு திருப்தி அளிக்காது. பெரிய செலவு ஒன்றை செய்ய நேரிடும். அதனால், பணப்பிரச்சனைகளை சந்திக்கலாம். மாலையில், உறவினர் வருகையில் மகிழ்ச்சி சேரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம் - இன்றைய தினம் எரிச்சலும், கோபமும் அதிகரிக்கக்கூடும். அமைதியற்ற சூழலால், வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. குழந்தைகளை மிகக் கடுமையாக கையாள வேண்டாம். இந்த நேரத்தில் அதிகப்படியான அழுத்தத்தை தவிர்த்து, வழிக்காட்டுதல் தான் தேவை. அலுவலக வேலைகள் கடினமாக உணரக்கூடும். இதனால், வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம். வணிகர்களுக்கு இன்றைய தினம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி நன்மை பெறுவீர்கள். உடல்நிலையில் சிறு பிரச்சனைகளை உருவாகக்கூடும். மனரீதியாக நன்றாக உணர மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 முதல் 9:15 வரை

கும்பம் - மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருக்க நேரலாம். இதனால், சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த நேரம் ஒதுக்க வேண்டும். வணிகர்கள் இன்று நல்ல பலனை பெறலாம். மறுபுறம், அலுவலக வேலைகளில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்களது அலட்சியப்போக்கு, பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது, வாழ்க்கைத் துணையுடன் சிறு மன கசப்பு ஏற்படலாம். அன்புக்குரியவருடனான கடுமையான அணுகுமுறை உங்களை சோகத்தை ஆழ்த்தலாம். பொருளாதார முடிவுகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை

மீனம் - உங்கள் பிடிவாத இயல்பு இன்று உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்று நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். மேலும், நீங்கள் எல்லோரிடமும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சரியாக நடத்துங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். வேலை அல்லது வணிகம், எதுவாக இருந்தால் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒருவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தால், இன்று அதை திருப்பிச் செலுத்த முடியும். சுகாதார விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0