இந்த ராசிக்காரங்க இன்னைக்கு மனைவியிடம் பொய் சொல்லாம இருக்குறது நல்லது!

இன்று மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றி பார்க்கலாம். 

இந்த ராசிக்காரங்க இன்னைக்கு மனைவியிடம் பொய் சொல்லாம இருக்குறது நல்லது!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - நீண்ட காலமாக முடிக்க முடியாமல் சிக்கித்தவித்த வேலை ஒன்று இன்று நிறைவடையலாம். அலுவலகத்தில் உங்களது சிறப்பான செயல்திறனால், உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவர். வணிகர்கள், இன்று கவனக்குறைவால் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம். வணிகம் சார்ந்த விஷயங்களில் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றாததன் காரணம் மனசோர்வு உண்டாகக்கூடும். பண வரவு திருப்தியளிக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம் - வீட்டில் இருந்தபடி அலுவலக வேலைகளை பார்ப்பவர்கள், இன்று உயர் அதிகாரிகளிடம் முறையாக தெரியப்படுத்த மறவாதீர்கள். இல்லையெனில், சில கடினமான சூழல்கள் உருவாகக்கூடும். வர்த்தகர்கள் இன்று நல்ல லாபத்தை ஈட்டமுடியும். குறிப்பாக, பழங்கள். இனிப்புகள் அல்லது பால் பொருட்கள் தொடர்பான பணியை மேற்கொள்பவர்கள் இன்று பெரிய நிதி நன்மையை பெறலாம். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முடியும். அன்புக்குரியவரிடம் இருந்து நல்ல பரிசை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நோய்தொற்று ஏற்படலாம். எனவே, தூய்மை விஷயத்தில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 முதல் 9 மணி வரை

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களே, இன்று காலை 07.16 மணி வரை உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. எனவே, அதுவரை மிகுந்த கவனம் தேவை. மற்றபடி, இன்றைய தினம் நீங்கள் சோம்பேறித்தனமாக உணர்வீர்கள். இதனை, தவிர்த்தால் பல முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். அலுவலக அரசியலில் மிகவும் கவனமாக இருங்கள். வீண் வதந்திகளில் விழாதீர்கள். முக்கிய பணிகள் குறித்து சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். வியாபாரிகள், பெரிய ஒப்பந்தம் எதாவது முடிக்கப் போகிறீர்கள் என்றால், பயன்படுத்தும் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற வார்த்தை பிரயோகத்தால் வேலை கெடக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாரோடு நல்லுறவை பேணுங்கள். உடல்நலம் சற்று பலவீனமாக உணரக்கூடும். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்  - கடக ராசிக்காரர்களே, இன்று காலை 07.16 மணி முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. எனவே, இந்த நாளில் கவனம் தேவை. தேவையற்ற கோபத்தை விட்டுவிடுங்கள். வீண் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். மற்றபடி, குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவடையக்கூடும். அன்புக்குரியவரின் உறவை வலுவாக்க, உங்கள் நடத்தையில் கண்ணியம் தேவை. மேலும், திருமணமானவர்கள். தங்களது வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவர். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பு, செயல்திறனை உயர் அதிகாரிகள் கவனிக்கக் கூடும். பெரிய செலவு ஒன்று காத்திருக்கிறது. நிதி சார்த்ந எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் 3:40 மணி வரை

சிம்மம் - இன்றைய தினம் வீட்டு தூய்மை மற்றும் அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வீட்டில் உள்ள அனைவரது ஆதரவையும் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடன்பிறப்புகளின் வேலைகளில் இருந்துவந்த தடைகள், உங்களது உதவியால் விலகி நிறைவடையும். அலுவலக வேலைகளை திட்டமிட்டபடி முடித்தால், தேவையற்ற பயத்தையும், கவலையையும் போக்கிடலாம். வணிகர்கள், தங்களது எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஏனென்றால், அவர்கள் சில முக்கிய வேலைகளை தடுக்க முயற்சிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 முதல் மதியம் 12:05 மணி வரை

கன்னி - இன்றைய தினம் உங்கள் ராசிக்கால் நல்ல நாள். அலுவலகத்தில் இருந்துவந்த மனஅழுத்தம் குறையக்கூடும். பணிச்சுமைகள் குறைந்து, குடும்பத்தினரோடு நேரம் செலவிட போதுமான நேரம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் மனம் திறந்து பேச வாய்ப்பு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு, இன்றைய தினம் மறக்க முடியாத தினமாக அமையக்கூடும். இன்று வணிகர்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவர். மேலும், முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:15 மணி வரை

துலாம் - வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குடும்பத்தாரோடு இணக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடமிருந்து நற்செய்தி ஒன்று கிடைக்கப்பெறலாம். அலுவலகத்தில், பதவி உயர்வு அல்லது வேறு சில வெற்றி செய்திகளை பெறலாம். நிதி நிலைமை மேம்படும். நீண்ட கால நிதி முயற்சிகள் வெற்றியடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள். மாலையில் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, உங்களுக்கு இன்றைய தினம் முழுவதும் ஆனந்தத்தில் திளைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11:05 மணி வரை

விருச்சிகம் - அலுவலக பணிச்சுமையால் மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடும். இதனால் மனசோர்வு உண்டாகலாம். இதுபோன்ற நேரங்களில், மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. மனக் குழப்பங்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களது சிறு தவறினால் கூட பெரிய பிரச்சனை உருவாகலாம். எனவே, எப்போதும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் வேலை பார்க்கவும். வணிகர்கள். எந்தவொரு புதிய வேலையை தொடங்குவதற்கும் முன்பு, அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உடல்நலம் பாதிக்கப்பட்ட உங்களது வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மேம்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை

தனுசு - இன்று உங்களது இயல்பில் சிறு மாற்றங்களை செய்ய வேண்டும். கோபம், ஆணவத்தை தவிர்க்கவும். இல்லையெனில், சர்ச்சையில் சிக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில், சக ஊழியர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பை பெற முயற்சிக்கவும். வழக்கத்தை விட வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக அமையும். புதிய முதலீடுகள் செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் பொய் கூறாமல் இருப்பதோடு, வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள். மனதில் உள்ளனவற்றை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பழைய கடனை திருப்பி செலுத்திட முடியும். உடல்நிலை பற்றி பேசினால், சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம் - இன்று வரவை மீறிய செலவு இருக்கலாம். எனவே, வரவு செலவு கணக்குகளை முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது. அலுவலகத்தில் அழுத்தம் அதிகரிக்கலாம். உங்களது வேலையை கவனமாக செய்து முடிப்பது நல்லது. உங்களை பற்றி பிறர் புகார் அளிக்கா வண்ணம் நடந்து கொள்ளுங்கள். பெரிய லாபம் எதிர்பார்த்து செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் சரிபார்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு பெரியவர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், இந்த நேரத்தில் உங்களுக்கு சிறு சிக்கல் இருந்தாலும், அதைப் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். மாலை வேளையில் சில விருந்தினர்களின் திடீர் வருகை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் 2 மணி வரை

கும்பம் - உடல்நலம் குறித்து இன்று மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திடீல் உடல் வலியால் அவதிப்படக்கூடும். அலுவலக வேலைகளை உரிய நேரத்தில் முடிக்காமல் உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். இது உங்கள் மன அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்யலாம். எனவே, முக்கிய பணகளை உரிய நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். உணவு மற்றும் பானங்களை வர்த்தகம் செய்வோர், இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். வீட்டு சூழல் சரியாக இருக்காது. உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். பண விவகாரத்தில் ஒருவருடன் தகராறு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மீனம் - வியாபாரிகள் இன்றைய தினம் மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, பண பரிவர்த்தனைகளை செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில், இன்று உங்களிடம் பெரிய பொறுப்பு ஏதேனும ஒப்படைக்கப்படலாம். அதனை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களது உழைப்பால் உயர் அதிகாரிகள் திருப்தியடைவர். குடும்பத்தில் இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். திட்டமிட்டபடி செலவுகள் செய்வது நல்லது. இன்றைய தினம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

like

dislike

love

funny

angry

sad

wow