இன்று இந்த ராசிக்காரர்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செவ்வாய்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
மேஷம் - பண விவகாரத்தில் இன்று சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். லாப நோக்கத்தில் எந்தவொரு அவசர முடிவுகள் எடுப்பதையும் தவிர்க்கவும். இல்லையெனில், லாபத்திற்கு பதில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். வேலை முன்னணியில் இன்று நல்ல முடிவுகளை காண முடியும். உங்களது பணிகளை சுலபமாக முடிக்க முடியும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்களை பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தங்கள் சாத்தியமாகும். தந்தையுடன் கருத்தியல் வேறுபாடுகள் உருவாகலாம். இத்தகைய சூழலில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை
ரிஷபம் - வியாபாரிகள் தங்களது வணிகத் திட்டங்களில் தேவையான சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். அப்போது தான் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். வாடிக்கையாளர்களை மனதில் வைத்து செயல்பட வேண்டியது அவசியம். வேலை பார்ப்பவர்கள், தங்களது பணிகளை முடிக்க அவசரப்படுவதைத் தவிர்க்கவும். பண வரவு திருப்தியளிக்கும். வாழ்க்கைத் துணையின் தன்மை கடுமையாக மாறக்கூடும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மன கவலை காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
மிதுனம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் முன்னேற விரும்பினால், கூடுதல் பொறுப்புகளை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும். வணிகர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக உங்களது பணி நிதி தொடர்பானது என்றால், இன்று சிறிது இழப்பை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வருமானம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். யோசித்து செலவிடுவது நல்லது. உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 முதல் 10 மணி வரை
கடகம் - சிறிய விஷயங்களில் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். இது உங்களது மன அமைதியைக் குலைப்பதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை இன்று சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் பணி போக்குவரத்துடன் தொடர்புடையது என்றால், இன்று சில பெரிய சிக்கல்களை தீர்க்க முடியும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் பழைய கடனை இன்று செலுத்தலாம். மாலையில் நண்பர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை
சிம்மம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு அவ்வளவு நாளாக இருக்காது. வேலை அல்லது வணிகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களது செயர்திறன் குறித்து அதிருப்தி அடைவார்கள். வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்கள், சட்ட விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப நிலைமை சாதாரணமாக இருக்கும். குடும்பத்தாரிடம் கண்டிப்பாக நடந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். இன்று பெரிய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
கன்னி - உங்கள் நிதி நிலையை வலுவாக்க, முதலில் சிறந்த பொருளாதாரத் திட்டம் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதனால் கடன்களை விரைவில் அடைத்திடலாம். வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி அலுவலகத்தில் நடக்க வேண்டியிருக்கும். மறுபுறம், வணிக விஷயங்களில் காட்டப்படும் அலட்சியம் தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
துலாம் - நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். மேலும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை நீங்கள் துரிதப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்பட வாய்ப்புள்ளது. ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உங்கள் குழந்தை பற்றிய பெரிய கவலை நீக்கப்படும். உடல்நிலையைப் பொறுத்தவரை, ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இன்று அதிகம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
விருச்சிகம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம். எனவே, கவனமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். முதலீடுகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. வானிலை மாற்றம் காரணமாக, சில ஆரோக்கிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். கொடுத்த பணம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். உங்கள் வேலையில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. வியாபாரிகள், இன்று சில புதிய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த நேரம் அதற்கு சாதகமானது கிடையாது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை
தனுசு - வேலையைப் பற்றி பேசினால், இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் போட்டி அதிகரிக்கும். கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணமாக வெற்றி காண முடியும். இன்று, உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். நீங்கள் அழகுசாதனப் பொருட்களை வர்த்தகம் செய்தால், இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். மேலும், அவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொண்ட எந்த முயற்சியும் வெற்றிகரமாக முடியும். இதனால் பெரிய கவலைகள் நீங்கும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை
மகரம் - ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோருக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். சிக்கி தவிக்கும் வணிக சிக்கலைத் தீர்ப்பதன் மூலம் பெரிய நிதி நன்மைகளைப் பெற்றிடலாம். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. முன்னேற்றத்திற்கான வழி திறக்கப்படும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் நிறைந்த நாளாக இருக்கும். அவர்கள் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவார்கள். பண நிலைமை வலுவாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 முதல் 10:20 மணி வரை
கும்பம் - இன்று வணிகர்களுக்கு நல்ல நாளாக இருக்காது. திடீரென்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். வேலை பார்ப்பவர்கள், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மோதலைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் பொன்னான நேரத்தை வீணாக அழிக்கும். மேலும், உங்கள் பெயரும் சேதமடையக்கூடும். வேலை தேடுபவர்கள், இன்று ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். மேலும், அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோருடனான உறவில் கசப்பு உருவாகலாம். உடல்நலம் பற்றி பேசினால், தசை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். அதிகப்படியான எடையை தூக்குவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 8:20 மணி வரை
மீனம் - பணிபுரிவோருக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மாற்று வேலை யோசனை இருப்பவர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள், கூட்டுத் தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தால் அவசரப்பட வேண்டாம். வரும் நாட்களில், பெரிய நன்மையைப் பெறக்கூடிய இடத்தில் முதலீடு செய்யுங்கள். குடும்பத்தில் திடீர் பிரச்சனையால், பதற்றம் அதிகரிக்கக்கூடும். நண்பர்கள் அல்லது உறவினர்களோடு கருத்து வேறுபாடு உருவாகலாம். செலவுகள் குறையும். பண வரவு திருப்தியளிக்கும். ஆரோக்கியத்தை பற்றி பேசினால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை