இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையுமே நம்பக்கூடாதாம்
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 2 செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - பணிச்சுமை இன்று குறைவாக இருக்கும். அதனால் உங்களுக்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், இன்று அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான பணி புரிவோருக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாகும். பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான நாளாக அமையும். தந்தையிடமிருந்து நிதி ஆதாயம் சாத்தியமாகும். உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம் - பண விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். செலவுகளை குறைப்பதோடு, கடன்கள் வாங்குவதையும் தவிர்த்திடவும். அலுவலக வேலைகள் சற்று மந்தமாக இருக்கும். சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மையை பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பிடித்த இடத்திற்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மிதுனம் - சிறிய விஷயங்களுக்காக அதிகரிக்கும் மன அழுத்தத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நீங்கள் மனரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது. இன்று வேலை முன்னணியில் கலவையான முடிவுகள் இருக்கும். தொழிலதிபர்கள், தங்கள் ஊழியர்களுடனான உறவை மேம்படுத்துவது நல்லது. கோபப்படுவதை தவிர்த்தால், பெரும் இழப்புகளை தவிர்த்திடலாம். உத்தியோகஸ்தர்களின் செயல்திறன், உயர் அதிகாரிகளை அதிருப்தி அடையச் செய்யலாம். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுவது நல்லது. பெற்றோருடனான உறவில் மனஅழுத்தம் சாத்தியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை
கடகம் - இன்று உங்களுக்கு வேலை முன்னணியில் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். குறிப்பாக வேலை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்க நினைப்போர் இன்று நல்ல வெற்றியைப் பெறலாம். புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது, முடிவுகளை சிறப்பாக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடையலாம். அன்புக்குரியவருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமநிலையை கொண்டு வர முயற்சிப்பது சிறந்தது. உடல்நலம் பற்றி பேசினால், இன்று தசைகள் தொடர்பான ஏதாவது பிரச்சனை ஏற்படலாம். அதிக பளு தூக்குவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
சிம்மம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு எதுவுமே சரியாக செய்யாது. குறிப்பாக உங்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தால், அலட்சியமாக இருக்க வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கடுமையான அணுகுமுறையை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் சிறு விஷயங்களுக்காக கோபப்பட நேரிடும். பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். உங்கள் பற்றி பிறர் குறை கூற அனுமதிக்காதீர்கள். வணிகர்கள் இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை
கன்னி - இன்று மாணவர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. குறிப்பாக, கலை சார்ந்து படிப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும. வீட்டு செலவுகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்கள் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். புதிய தொழில் தொடங்க நினைப்போர், எதிர்மறையான அம்சங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கவும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோருடனான உறவு வலுப்பெறும். அதிகப்படியான மன அழுத்தத்தால் இன்று, தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை
துலாம் - இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கப்போகிறது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப் படி நடந்து கொண்டால், நிச்சயம் பயனடையலாம். உங்களிடம் ஏதேனும் முக்கிய பணி ஒப்படைக்கப்பட்டால், அதனை கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் நிறைவேற்ற முயற்சிக்கவும். வணிகர்கள் இன்று பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெற வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் அடையலாம். குடும்ப வாழ்க்கையில், பெரியவர்களுடனான உறவு வலுவாக்க முயற்சிக்கவும். குடும்பத்தாருடன் கூடுதல் நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உடல்நலம் பற்றி பேசினால், சளி, கபம் போன்ற பிரச்சனைகள் இன்று ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6:20 மணி வரை
விருச்சிகம் - உத்தியோகஸ்தர்கள், அதிகப்படியான நம்பிக்கை காரணமாக இன்று எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக வேலையை மாற்ற நினைத்தால், அதைத் தவிர்த்திடவும். தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோருக்கு இன்று மிகவும் புனிதமானதாக இருக்கும். நீங்கள் இன்று பெரிதும் பயனடையலாம். வரவு நல்ல நிலையில் இருக்கும். இன்று நீங்கள் எந்த பெரிய செலவையும் செய்யலாம். எந்தவொரு நற்செய்தியையும் இன்று வாழ்க்கைத் துணையிடமிருந்து பெறலாம். உங்கள் அன்புக்குரியவருடனான உறவு வலுவாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் உடன்பிறப்புகளுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை
தனுசு - இன்று சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் நீங்கள் மிகவும் ஏமாற்றமடைவீர்கள். அதனால் மிகவும் கோபமாக உணரலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள், இன்று அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடுமையாக உழைப்பீர்கள். கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள், பண விஷயத்தில் கண் மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள். மரம் தொடர்பான வியாபாரம் செய்வோர் இன்று ஒரு பெரிய ஒப்பந்தம் பெற வாய்ப்பு பெறலாம். குழந்தைகள் தொடர்பான விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இது தவிர, நீங்கள் வீட்டு உறுப்பினர்களுடன் மோதலைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், உறவில் பெரிய பிளவு ஏற்படலாம். உடல்நலம் பற்றி பேசினால், நீண்ட நேரம் பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
மகரம் - எந்தவொரு ஆவணத்தையும் இன்று படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். கூட்டு வியாபாரம் செய்வோருக்கு இன்று மிகவும் புனிதமாக இருக்கும். நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையோர், இன்று எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். அரசு பணியாளர்கள் தங்கள் கடின உழைப்பின் நல்ல பலனைப் பெறலாம். பதவி உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் சிறிது குறையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7:00 மணி வரை
கும்பம் - உத்தியோகஸ்தர்கள் இன்று நல்ல பலனைப் பெறலாம். வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புள்ளது. உங்கள் சம்பளமும் அதிகரிக்கக்கூடும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். வணிகர்கள் இன்று பேரம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான வழக்கு தீர்க்கப்படும். பெற்றோரின் உடல்நலம் குறித்து நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று பொருளாதார முன்னணியில் ஓரளவு விலை உயர்ந்தாக இருக்கும். ஆறுதலான விஷயங்களுக்கு கொஞ்சம் பணம் செலவிடலாம். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மதியம் 1 மணி வரை
மீனம் - குடும்ப முன்னணியில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் சாதனைகள் குறித்து பெற்றோர் பெருமைப்படுவர். அவர்களுடனான உங்கள் உறவும் வலுவாக இருக்கும். இன்று நீங்கள் குடும்பத்துடன் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூட வரும். புதிய வேலை தேடுபவர்கள், தங்கள் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். வணிகர்கள் இன்று நல்ல பலனைப் பெறலாம். எதிர்பார்த்த முடிவுகளை பெற வேண்டுமெனில், கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். பண வரவு திருப்தி அளிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உடற்சோர்வு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:25 மணி வரை