இந்த வாரம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும்...
அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா?
இந்த வாரம், அதாவது ஆகஸ்ட் 15, 2021 முதல் ஆக்ஸ்ட் 21, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
மேஷம்
இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வீட்டின் சூழல் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் ஏதேனும் முக்கியமான முடிவை எடுத்தால், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பழைய சொத்து தொடர்பான எந்த விஷயத்தையும் தீர்ப்பதன் மூலம் இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்களும் சாத்தியமாகும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் கடினமான வாரமாக இருக்கும். இந்த திடீர் பணிச்சுமை உங்கள் மீது அதிகரிக்கலாம். எனினும், உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. விரைவில் உயர் பதவியைப் பெறலாம். எனவே கடினமாக உழைக்க தயங்காதீர்கள். இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் இலாபகரமானதாக இருக்கும். குறிப்பாக நீங்கள் மளிகை, பொது கடை போன்ற வேலைகளைச் செய்தால், இந்த காலகட்டத்தில் நிதி நிலை வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். இந்த வாரம் உணவில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
ரிஷபம்
நிதி விஷயத்தில் இந்த வாரம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதிகரிக்கும் செலவுகள் நிதி நிலையைக் கெடுத்துவிடும். இந்த வாரத்தில், உறவினர்கள் விருந்தோம்பலில் நீங்கள் நிறைய பணம் செலவழிக்கலாம். மற்றவர்களைக் கவர அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த காலகட்டத்தில் வேலையில் அதிக கவனக்குறைவாக இருந்தால், முதலாளியும் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையை செய்வோர் இந்த காலகட்டத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். நிலுவையில் உள்ள வேலையை முடிக்க வலுவான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உங்கள் அன்புக்குரியவர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணரலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம். எனவே, மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: புதன்
மிதுனம்
நீங்கள் ஒரு வர்த்தகர் மற்றும் புதிய பங்குகளை வாங்க திட்டமிட்டால், இந்த நேரம் அதற்கு ஏற்றது. கூட்டு வியாபாரம் செய்வோருக்கு இந்த நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு வேலையில் இருந்தால், இந்த நேரத்தில் ஒரு புதிய தொழிலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்தினால் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் மாமியார் மூலம் பதற்றம் சாத்தியமாகும். உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். கோபம் மற்றும் விவாதங்கள் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறந்த புரிதலைக் காட்ட வேண்டும். இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் வெளி உணவைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கடகம்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த மன பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம். பெற்றோரின் உடல்நிலை சரியில்லை என்றால், அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். எனினும் நீங்கள் அவர்களை சரியான முறையில் கவனிக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் அவசரப்படாமல் இருந்தால் நல்லது. உயர் அகாரிகளை மகிழ்விக்க உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் கொடுக்காதீர்கள். வணிகர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பி அதில் ஏதேனும் தடை இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் பிரச்சனை நீங்கும். இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை கலவையான முடிவுகளை கொடுக்கும். வாரத்தின் தொடக்கத்தில் நிறைய பணம் செலவழிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை
சிம்மம்
இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். முக்கியமான முடிவுகளை நீங்களே சொந்தமாக புத்திசாலித்தனமாக எடுக்கவும். மற்றவர்களை அதிகம் சார்ந்து இருக்காதீர்கள். இந்த வாரம் வணிகர்களுக்கு நல்லதாக இருக்காது. வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் சில வேலைகளில் தடைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் நிதி இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டு வணிகம் செய்வோர் வியாபாரத்தில் எந்த மாற்றத்தையும் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக உங்கள் ரகசியத் தகவலை பிறருடன் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் உறுப்பினருடன் பிரிந்து செல்வது சாத்தியமாகும். உங்கள் கோபமான இயல்பால் நீங்கள் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு ஏதேனும் இதய நோய் அல்லது சுவாச பிரச்சனைகள் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
கன்னி
வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மனம் அமைதியாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். பணத்தின் அடிப்படையில் நல்ல முடிவுகளைப் பெறலாம். பணத்தை திரும்பப் பெறுவதன் மூலம் உங்கள் நிதி சிக்கலை தீர்க்க முடியும். இந்த காலகட்டத்தில், நீங்கள் பணம் தொடர்பான சில பெரிய வேலைகளையும் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் இந்த காலகட்டத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், உங்களுடைய முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்கவும். அரசு ஊழியர்கள் தங்கள் கடின உழைப்பால் நல்ல பலனை பெற முடியும். நீங்கள் ஒரு உயர் பதவியைப் பெறலாம். இரும்பு வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வியாபாரம் பெருகும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இந்த வாரம் உங்கள் திட்டங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டால் நல்லது. இல்லையெனில் நீங்கள் அவசரத்திலும் பீதியிலும் பல தவறுகளைச் செய்யலாம். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். பங்குச் சந்தை தொடர்பான வேலை செய்வோருக்கு இந்த வாரம் நல்லதாக இருக்காது. இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உணவகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை மேம்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அழகான திருப்பம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் உங்கள் துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுவதால், உங்கள் உறவு பலவீனமடையும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வயிறு தொடர்பான சில நாள்பட்ட நோய்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை
விருச்சிகம்
குடும்பத்தில் உங்களுக்கு இந்த வாரம் மிக சிறப்பானதாக இருக்காது. உங்கள் தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். அவர்கள் உங்களுக்கு ஏதாவது அறிவுரை வழங்கினால், அவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். ஏனென்றால் அவர்கள் உங்கள் நலனை மட்டுமே விரும்புகிறார்கள். வாரத்தின் நடுப்பகுதியில், ஒரு பழைய நீதிமன்ற வழக்கு உங்களை தொந்தரவு செய்யலாம். இந்த நேரத்தில் நீங்கள் நிறைய பணம் செலவழிக்கலாம். வேலை முன்னணியில், நீங்கள் எந்த மாற்றத்திற்கும் திட்டமிட்டால், அதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் எந்த புதிய வேலையும் தொடங்கக்கூடாது. நீங்கள் ஒரு பெரிய முதலீட்டைச் செய்ய விரும்பினால், சரியான ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் இறுதி முடிவை எடுங்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். கோபம் மற்றும் ஆணவத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில், நீங்கள் வேலையை இழக்கக்ககூடும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
தனுசு
இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள். மேலும் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் எல்லா முடிவுகளையும் மிகவும் கவனமாக எடுப்பீர்கள். முதலில் உங்கள் வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் நேர்மறை மற்றும் கடின உழைப்பு உங்களை மற்றவர்களை விட முன்னேற்றச் செய்யும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். முதலாளி உங்கள் கடின உழைப்பைக் கருத்தில் கொள்ளலாம். வணிகர்கள் சமீபத்தில் பெரிய இழப்பைச் சந்தித்திருந்தால், இந்த நேரத்தில் உங்கள் இழப்பை ஈடுசெய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்வோர், இந்த காலகட்டத்தில் தங்கள் துணையுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் மிகவும் கவனக்குறைவாக இருக்காதீர்கள். போதுமான அளவு சத்தான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நாள்: மெரூன்
மகரம்
இந்த வாரம் உங்களுக்கு வேலையில் நல்ல முடிவுகளை கொடுக்கும். குறிப்பாக உத்தியோகஸ்தர்களுக்கு, இந்த நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உங்களுக்குத் திறக்கும். நீண்ட காலமாக அரசு வேலைக்கு கடினமாக முயற்சித்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளின் நிதி பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள வேலை முடிவடையும். எலக்ட்ரானிக்ஸ், அழகுசாதனப் பொருட்கள், தளபாடங்கள் போன்ற வேலைகளைச் செய்வோர் பெரும் நிதி ஆதாயங்களைப் பெற முடியும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் ஒரு மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சில நல்ல செய்திகளையும் பெறலாம். பணத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால் இந்தக் காலத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்க முடியும். வார இறுதியில், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
கும்பம்
பண விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது உங்களுக்கு நன்றாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் சேமிப்பால், நிதி நெருக்கடியிலிருந்து விலகி இருக்க உதவும். நீங்கள் ஒரு பழைய சொத்தை விற்க விரும்பினால், இந்த நேரத்தில் நல்ல வாய்ப்பைப் பெறலாம். எந்தவொரு பெரிய முதலீடும் செய்வதில் வணிகர்கள் அவசரப்பட வேண்டாம். சட்ட விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் கசப்பான வார்த்தைகள் உங்கள் பெயரைக் கெடுத்துவிடும். மேலும், இது உங்கள் வேலையில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தை கெடுக்கும் வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களில் அவருடன் சண்டைகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் மன அழுத்தம் அதிகரித்து வருவது உங்களை உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
மீனம்
இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சர்ச்சைகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை நன்றாக இருக்காது. உங்களை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக வேலை செய்தால் நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறித்த அக்கறை அதிகரிக்கும். அன்புக்குரியவரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். மேலும், நீங்கள் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளுக்கு நிறைய பணம் செலவிடலாம். அலுவலகத்தில் உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். நிலுவையில் உள்ள பணிகளின் சுமையை அதிகரிக்க விட வேண்டாம். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். மேலும், முதலாளியின் முன்னால் உங்கள் பெயரும் மோசமடையக்கூடும். இந்த வாரம் ஆடை வியாபாரிகளுக்கு லாபகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு கல்லீரல் தொடர்பான நோய் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை