இன்றைய ராசிப்பலன் (02.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நற்செய்திகள் தேடி வரும்!

இன்றைய தினம் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிப்பலன் (02.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நற்செய்திகள் தேடி வரும்!

இன்று தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். சனிக்கிழமைக்கான ராசி பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் ஆனந்தமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில், உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். மேலும், உயர் அதிகாரிகள் இன்று உங்களைப் புகழ்ந்து பாராட்டுவார்கள். இதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

ரிஷபம் - இன்றைய தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். காலையில் சில நற்செய்திகள் உங்களை தேடி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒரு முக்கியமான பணியை வழங்கினால், அதனை கவனமாக செய்து முடிக்க முயற்சிக்கவும். மறுபுறம், வணிகர்கள் தங்கள் வணிக முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். கூட்டுத் தொழில் தொடங்க நினைத்தால், அவசரப்பட வேண்டாம். சில நாட்களாக வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு அனைத்தும் முடிவடையும். உடல்நலம் பற்றி பேசினால், உணவில் அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 முதல் 2 மணி வரை

மிதுனம் - இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதல் போக்கை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உயர் அதிகாரிகள் உங்களது வேலையில் அதிருப்தி அடைவதற்காக, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் தவறுகளை திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். வணிகர்கள் சில நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடும். பண சிக்கலால், உங்களது சில வேலைகள் நடுவில் சிக்கிக்கொள்ளக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். இன்று தந்தையிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம் - இன்று நீங்கள் பழைய கடனை திருப்பிச் செலுத்த முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். வீட்டு பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடன்பிறந்தோரின் உதவியுடன், எந்த பெரிய பிரச்சனைகளையும் இன்று தீர்க்க முடியும். திருமணமானவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. திருமண வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும். வேலை முன்னணியில் முன்னேற இன்று நல்ல வாய்ப்பை பெற முடியும். உங்களது தொடர் விடாமுயற்சியால், விரைவில் நீங்கள் வெற்றியின் உச்சத்தில் இருப்பீர்கள். மறுபுறம், வணிகர்கள் தங்களது கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெற்றிடலாம். நீண்ட காலமாக வேலையில் இருந்துவந்த தடைகள் அகன்று பெரும் நிவாரணம் கிடைக்கும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம் - இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும் நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் கூடுதல் வேலைகள் ஒதுக்கப்படலாம். இருப்பினும், இந்த நேரத்தில் ஒவ்வொரு பொறுப்பையும், நேர்மை மற்றும் கடின உழைப்பால் நிறைவேற்ற முயற்சிக்கவும். வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை நிலையற்றதாக இருக்கும். வீட்டில் சில உறுப்பினர்கள் சரியாக நடந்து கொள்ள மாட்டார்கள். இந்த விஷயத்தை பொறுமையுடன் தீர்க்க முயற்சி செய்யவும். சண்டைகளைத் தவிர்க்கவும். உடல்நிலை பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

கன்னி - இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போகிறது. இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். புதிய அல்லது பெரிய திட்டத்தில் பணிபுரிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பயணம் மிகவும் புனிதமானதாக இருக்கும். நிதி நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. மேலும், நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பதன் மூலம், பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும். பெற்றோருக்கு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இணக்கமாக இருக்கும். அன்புக்குரியவரிடமிருந்து ஒரு அற்புதமான பரிசைப் பெறலாம். உங்கள் உடல்நிலை பற்றி பேசும்போது, சிகரெட் மற்றும் ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

துலாம் - இன்று, தேவையில்லாத மனசோர்வு ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மிகவும் அழுத்தமாக உணருவீர்கள். முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி சிந்திப்பதன் மூலம் மன அமைதியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பண நிலைமை நன்றாக இருக்கும். பெரிய செலவுகள் செய்ய ஏற்ற நாள் இல்லை. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வீட்டின் பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை பற்றி விவாதிக்காமல் இருப்பது நல்லது. உங்கள் உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம் - இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். இன்று அலுவலகத்தில் வேலை அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மிகவும் பதற்றமாக உணருவீர்கள். அத்தகைய சூழலில் மனதை அமைதியாக வைத்திருப்பதுடன், வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வணிகர்கள் தங்களது வணிகம் சார்ந்த முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கூட்டு வியாபாரம் செய்வோர், எந்த முக்கியமான முடிவுகளையும் சிந்திக்காமல் எடுக்க வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் உறவில் கசப்பு அதிகரிக்கும். பொருளாதார முன்னணியில் இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உடல்நலம் பற்றி பேசினால், உணவில் அலட்சியம் காட்டாமல் இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு - அலுவலகத்தில் இருந்து திடீர் நற்செய்திகளைப் பெறலாம். பதவி உயர்வு பெறலாம் அல்லது நீங்கள் விரும்பும் இடமாற்றத்தைப் பெறலாம். நீண்ட காலமாக வேலை தேடுபவராக இருந்தால், இன்று பெரிய நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இன்று பெரிய வாய்ப்பு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று சில பெரிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இன்று தந்தையுடன் வாக்குவாதம் செய்ய வாய்ப்புள்ளது. இந்த வகை சூழ்நிலையில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். வேலை அல்லது வணிகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், அவர்களின் அதிருப்தியை சமாளிக்க முயசிக்கவும். முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதை அலைபாய விடுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.உடல்நிலையைப் பற்றி பேசினால், இன்று மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

கும்பம் - இன்று நாளின் தொடக்கம் அவ்வளவு நன்றாக இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது விவாதம் உருவாகலாம். இந்த விஷயத்தை மேற்கொண்டு வளர்க்காமல் பார்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து சில முக்கியமான ஆலோசனையையும் பெறலாம். அவர்களின் ஆலோசனையின்படி நடந்தால், வரும் நாட்களில் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பெரிய லாபத்திற்காக வர்த்தகர்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்தால், அவசரமாக எந்த வேலையும் செய்வதைத் தவிர்க்கவும். வரவிற்கு மேல் செலவுகள் அதிகரிக்கும். சில உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே, கவனக்குறைவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம் - இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். மேலும், உயர் அதிகாரிகளின் உதவியுடன், முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் பணி எண்ணெயுடன் தொடர்புடையது என்றால், எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும், குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல்நலம் என்று வரும்போது, தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் முதுகுவலி ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 4 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0