இன்று இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும்...

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 07 வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும்...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - இன்று நீங்கள் திட்டமிடாமல் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களை நேர்மறையாக வைத்திருங்கள். விவாதங்களிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்களை எதிர்மறையாக உணரவைக்கும் மற்றும் மன அழுத்தத்தை கொடுக்கும் நபர்களுடன் நட்பு வேண்டாம். உங்கள் மன மகிழ்ச்சிக்காக தனியாக சிறிது நேரம் செலவிடவும் கற்றுக்கொள்ளவும். உங்கள் நலனை விரும்பும் நபர்களுடன் எப்போதும் இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட நேரம்: பகல் 12:30 மணி முதல் மாலை 2:00 மணி வரை

ரிஷபம் - இன்று நீங்கள் சில புதிய தகவல்களைப் பெறலாம். இது பின்வரும் நாட்களில் உங்களுக்கு பயனளிக்கும். நெருங்கிய அல்லது குடும்ப உறுப்பினரிடமிருந்து திடீர் நன்மையைப் பெறுவீர்கள். இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிடாதீர்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழிலை மேம்படுத்த தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். இன்று உங்கள் கடந்த கால அனுபவத்தின் உதவியால் வேறொருவருக்கு உதவலாம். வணிகர்கள் ஏதேனும் முதலீட்டு செய்ய திட்டமிட்டிருந்தால் இன்று அதற்கு நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் காலை 11:30 மணி வரை

மிதுனம் - இன்று மிதுன ராசிக்காரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நாளை தொடங்குவர். இன்று உங்களது மனம் போட்டித்தன்மையுடன் செயல்பட ஊக்குவிக்கும். இதன் மூலம் வேலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். இருப்பினும், உங்களது அதிகப்படியான நம்பிக்கையின் பேரில் செயல்பட்டால் வெற்றி அடைய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்கள் வழிகளை மாற்ற வேண்டி இருக்கலாம். இன்று உங்களை கோபப்படுத்தும் விஷயங்களிலிருந்து சற்றே விலகி இருங்கள். சில விஷயங்களைப் புறக்கணிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவலை கொள்ள தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கடகம் - கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க முயற்சிப்பார்கள். இன்று உங்கள் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். அவர்களுடன் நேரத்தையும் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்தி கொண்டால் மன அமைதியை பெறலாம். வீட்டின் சூழலும் இன்று நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் துறை சார்ந்த பிரச்சனைகள் சிலவற்றை சந்திக்க நேரிடும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். நேரத்திற்கு உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம் - நீங்கள் புரிதலையும் பொறுமையையும் காட்டினால், விரிசல் விழுந்த உங்கள் உறவு மீண்டும் மேம்படும். உங்கள் மனதிலிருந்து முழுமையாக முயற்சி செய்தால், உங்கள் உறவு மீண்டும் கூடும். இன்று, அனைத்து தவறான புரிதல்களும் அகற்றப்படும். இன்று நீங்கள் உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை உணர்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் வேலைப்பளு சற்றே அதிகரிக்கக்கூடும். இதனால் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். அன்புக்குரியவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் நீங்கள் நிம்மியாக உணருவீர்கள். ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் மருந்துகளை மறவாமல் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கன்னி - இன்று நீங்கள் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்க முடியும். உங்கள் முன்னேற்றத்திற்கான பாதையை தேர்ந்தெடுப்பது பற்றிய எண்ணம் மேலோங்கும். இன்று நீங்கள் எதிர் வரவிருக்கும் இலக்குகளை கருத்தில் கொண்டு செயல்படலாம். எதிர்காலத்திற்கான திட்டமிடல் உங்களுக்கு மிகவும் முக்கியம். முழுமையான திட்டமிடலும், விடா முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு அருகே உங்களை அழைத்து செல்லும். எனவே, அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனை கேட்டபின்னர், திட்டத்தில் முன்னேறவும். இன்று நீங்கள் உங்களின் சில முக்கியமான வேலைகளைச் சமாளித்து முடித்து காட்ட முடியும். இன்று பெற்றோர் உடல்நலம் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: லாவெண்டர்

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம் - இன்று நீங்கள் மனதளவில் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். உங்கள் நண்பர்கள் இன்று உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள். இன்று உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். இதன் காரணமாக நீங்கள் அழுத்தமாக உணரலாம். நீங்கள் பொறுமையுடன் வேலைகளைக் கையாள வேண்டும். இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். மருத்துவ செலவுகள் இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் உள்ள வயதான உறுப்பினரில் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

விருச்சிகம் - இன்று நீங்கள் சில நல்ல செயல்களைச் செய்ய இன்றைய தினத்தைப் பயன்படுத்தலாம். இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் லேசான மனநிலையிலும் இருப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை இது காட்டும். திட்டமிட்டு உங்கள் நாளைத் தொடங்குங்கள். மாலையில் நீங்கள் நேர்மறையான செயல்பாட்டால் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடித்திட முடியும். இதனால் அலுவலகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை

தனுசு - இன்று நீங்கள் சில திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் அலுவலக வேலைக்காக வெளியே செல்ல வேண்டியிருக்கலாம். இந்த பயணம் உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் தொழில் புதிய திசையைப் பெறலாம். இனறைய கிரக நிலைகள் உங்களுக்கு முழு ஆதரவையும் தரும். உங்கள் முக்கியத்துவத்தை அலுவலகத்தில் எல்லோருக்கும் புரிய வைக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் இன்றும் மறக்கமுடியாத நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம் - இன்று நீங்கள் உங்களுக்குள் மிகப்பெரிய ஆற்றலை உணர்வீர்கள். இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் வேலையில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பிறருக்கு உதவ இன்று நீங்கள் முன்வருவீர்கள். வீட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நிதி ரீதியாகவும் எந்த பிரச்சனையும் இருக்காது. வணிகர்கள் புதிய தொழிலைத் தொடங்க இருந்தால் இன்று அதற்கு சாதணமாக நாள். உங்கள் வணிக லாம் இரட்டிப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம் - இன்று நீங்கள் பல்வேறு வகையான உணர்ச்சிகளை உணர முடியும். உங்களுக்கு மனநிலை மாற்றங்கள் இருக்கலாம். இன்று நீங்கள் எந்தவொரு பிரச்சனையை பற்றியும் அதிகம் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். எதையாவது ஆழமாக யோசிக்க முயற்சிக்கும்போது,​​நீங்கள் மேலும் குழப்பமடைவீர்கள். இன்று உங்களுக்கு மன ஓய்வு தேவை. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வேலையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்கலாம். நடனமாடலாம். தியானிக்கலாம் அல்லது படிக்கலாம். முடிந்தால் நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள். மனதை அமைதிப்படுத்த முடிந்தளவு முயற்சியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சாதகமான நேரம்: காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை

மீனம் - இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சிறிய விஷயங்களுக்கு கூட நீங்கள் அதிகமாக கோபப்படலாம். இன்று உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வேலையை கெடுக்க நினைக்கும் எதிரிகளிடம் இன்று நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். நீங்கள் எந்தவித கவனக்குறைவையும் தவிர்க்க வேண்டும். பொறுமையாக வேலை செய்யுங்கள். விரைவில் நேரம் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் பலவீனங்களை ஒதுக்கிவிட்டு வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று எந்த சர்ச்சைகளிலிருந்தும் விலகி இருங்கள். உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: லாவெண்டர்

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0