இன்று இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமாக இருக்கணும்…
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 16 செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று பணத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நீங்கள் ஒரு பரிசை வழங்கலாம். உங்கள் வரவிற்கு மீறி செலவு செய்யாமல் இருப்பது நல்லது. வேலை பற்றி பேசினார், வேலைக்கான உங்கள் உற்சாகத்தை குறைய விட வேண்டாம். மிகச்சிறிய பணிகளைக் கூட கவனமாகவும் விடாமுயற்சியுடனும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், உங்கள் முன்னேற்றத்தின் பலன் நெருங்கி வருகிறது. வர்த்தகர்களும் நன்றாக பயனடையலாம். இன்று ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
ரிஷபம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்கள் கல்வியில் ஒரு பெரிய தடை உருவாகலாம். உங்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும். எனவே, உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களை மிகவும் கவனமாக கையாள்வது நல்லது. அரசு வேலைகளில் பணிபுரிவோர் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பதவி உயர்வு குறித்த நல்ல செய்தியைப் பெறலாம். பணம் நல்ல நிலையில் இருக்கும். இன்று எந்த விலையுயர்ந்த பொருளும் வாங்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். குடும்பத்துடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, புகைப்பழக்கத்திலிருந்து விலகி இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை
மிதுனம் - இன்று தேவையில்லாத விவாதத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில், உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், வணிகர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வணிக முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும். பண விஷயத்திலும் நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகள் முன்பு ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இன்று அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அவர்களின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள். வேலை தேடுபவர்கள் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு ஒவ்வாமை அல்லது நோள் தொற்று இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் 6:50 மணி வரை
கடகம் - இன்று வணிகர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். திடீரென நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய பரிசீலிக்கலாம். ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் உதவியுடன் பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய வேண்டாம். வீட்டு உறுப்பினர்களுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடல் முடிவிற்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் இரவு 7:20 மணி வரை
சிம்மம் - இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் முக்கியமான சில பணிகள் சரியான நேரத்தில் முடிக்கப்படும். உத்தியோகஸ்தர்களின் செயல்திறனால் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். உணவு தானியங்கள் தொடர்பான வியாபாரம் செய்வோருக்கு இன்று மிகுந்த லாபம் கிடைக்கும். பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். நாளின் இரண்டாம் பாகத்தில், வாழ்க்கைத் துணைவியுடன் ஒரு மங்கள நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையை வலுவாக வைத்திருக்க, பொருளாதார முடிவுகளை கவனமாக எடுக்கவும். உடல்நலம் பற்றிப் பேசினால், ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், மிகவும் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
கன்னி - இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் நிதானமும், கவனமும் தேவை. இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். கட்டுப்பாடற்ற கோபம் உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கக்கூடும். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், சக ஊழியர்களுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் மீது வேலையின் அழுத்தமும் அதிகமாக இருக்கும். வர்த்தகர்கள் புதிய பங்குகளை வாங்க இன்று உகந்த நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிது பதற்றம் இருக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். இன்று கடன் கொடுக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், மன அழுத்தத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 11 மணி வரை
துலாம் - உங்கள் மீது வேலை அழுத்தம் இன்று அதிகரிக்கலாம். இதனால் உடல்நலம் மற்றும் செயல்திறன் இரண்டுமே பாதிக்கப்படலாம். உத்தியோகஸ்தர்கள், இன்று திடீரென்று பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்கள் இன்று சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால், விரைவில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். நிதி நிலைமை மேம்படுத்த முடியும். கடன் கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியும். பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்ட எந்தவொரு வேலையும் இன்று நிறைவடைய வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற விவாதம் ஏற்படலாம். இருப்பினும், மாலைக்குள், கோபம் எல்லாம் அமைதியாகிவிடும். துணையிடமிருந்து ஒரு அற்புதமான பரிசையும் நீங்கள் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை
விருச்சிகம் - நீங்கள் முழு தைரியத்துடன் துன்பங்களை எதிர்கொள்வீர்கள். நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். வேலையைப் பற்றிப் பேசினால், அலுவலகத்தில் உள்ள கடினமான பணிகளைக் கூட சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் சட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பெரிய சிக்கலில் சிக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை இன்று அவ்வளவு நன்றாக இருக்காது. வருமானத்தை அதிகரிக்கும் உங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டு பெரியவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். உங்கள் முரட்டுத்தனமான நடத்தை அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடைவதால் கவலை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 3 மணி வரை
தனுசு - உங்கள் குழந்தை தொடர்பான எந்தவொரு கவலையும் இன்று நீங்கலாம். இன்று குழந்தைகளுடன் மிகச் சிறந்த நேரத்தை செலவிடலாம். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகள், தங்கள் வணிகத்தில் நல்ல வளர்ச்சியை காணலாம். இன்று, உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வேலையிலும், நடத்தையிலும் கவனம் செலுத்துங்கள். பணத்தின் நிலைமை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பை அதிகரிக்க விரும்பினால், வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை
மகரம் - அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். நிலுவையில் உள்ள வேலையின் சுமை அதிகரிக்கலாம். வேலையில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது இன்று மிகவும் சுமையாக உணருவீர்கள். எனவே, உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. கூட்டு வியாபாரம் செய்வோருக்கு சிறந்த நாள். எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். நீண்ட காலமாக நடந்து வரும் எந்த நிதி முயற்சியிலும் வெற்றி காணலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் துணையின் ஆலோசனை மூலமாக பயனடையலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, ஆரோக்கியமாக இருக்கக, தினமும் ஆரோக்கியமாக உணவுப்பழக்கத்துடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கும்பம் - இன்று அவசரத்தையும் பயத்தையும் தவிர்க்கவும். இல்லையெனில், மனதளவில் காயமடையக்கூடும். இது தவிர, வாகனம் ஓட்டும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று பொருளாதார முன்னணியில் மிகவும் புனிதமான நாளாக இருக்கப்போகிறது. குறைந்த முயற்சியில் இன்று நல்ல பணம் சம்பாதிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்களும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று துணி வியாபாரிகளுக்கும் மிக முக்கியமான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் காதல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மதியம் 12 மணி வரை
மீனம் - இறக்குமதி ஏற்றுமதியுடன் தொடர்புடைய உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் இன்று பெரிதும் பயனடையலாம். தங்கள் கடின உழைப்பின் நல்ல பலனைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்று ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு ஆழமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இருந்துவந்த, மோசமான சூழல் மாறி மகிழ்ச்சி திரும்பும். முடிந்தால், இன்று அவர்களுக்கு ஒரு நல்ல பரிசு வழங்க திட்டமிடுங்கள். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று வயிறு தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மதியம் 12 மணி வரை