இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 16 சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இன்று தந்தையின் உடல்நிலை குறித்த கவலை அதிகரிக்கக்கூடும். அவ்வப்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, நன்கு கவனித்துக்கொள்வதும் நல்லது. கூட்டு வியாபாரத்தில் இருந்துவந்த பதற்றம் விரைவில் முடிவடையும். எந்தவொரு பாதகமான சூழலிலும், அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில், வழக்கத்தை விட இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். பண பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். அலுவலகத்தில், சக ஊழியர்களை அதிகமாக நம்ப வேண்டாம். வணிகர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் 6:30 மணி வரை
ரிஷபம் - நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்காக நேரத்தை ஒதுக்க முடியும். ஆரோக்கியத்தை கவனம் செலுத்துவீர்கள். இதனால், மன அழுத்தம் குறைந்து நன்றாக உணருவீர்கள். இன்று தொழில் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். மாற்று வேலை குறித்து யோசிப்பவர்களுக்கு, சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். வீட்டில் திடீர் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்றைய தினம் வீட்டு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 முதல் 10; 00 மணி வரை
மிதுனம் - இன்று உங்களுக்கு கலவையான தினமாகவே இருக்கும். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்பதன் மூலம், வெற்றிப்பெற முடியும். கடினமாகவும், ஆர்வத்துடன் வேலை செய்தால் விரைவில் வெற்றி பெறலாம். இன்று பண விவகாரத்தில் ஏமாற்றமடையக்கூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல், மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். வீட்டு சூழல்களை கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் கையாளவும். இல்லையெனில், நிலைமை மோசமடையக்கூடும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், மன அழுத்தம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை
கடகம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும், நிதானமமாகவும் இருக்கவும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாட்டால், வீட்டில் பதற்றமான சூழல் நிலவும். உங்கள் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள முயற்சிப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கினால், அனைத்தும் சாதகமாக மாறுவதை உணரலாம். அதிகப்படியான வேலை காரணமாக சோர்வாக இருப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது, உங்கள் பக்க நியாயத்தை தெளிவாக எடுத்துரைக்கவும். ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இரவில் தாமதமாக தூங்குவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
சிம்மம் - உத்தியோகஸ்தர்களின் வாழ்க்கையில் இன்று மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கிடும். வேலை தேடுபவர்களின் தேடலுக்கான நல்ல பலன் கிடைக்கப் போகிறது. வணிகர்களுக்கு, அதிர்ஷ்டம் இன்று உங்கள் பக்கம் இருப்பதால், வேகமான முன்னேற்றத்தைப் பெற்றிடலாம். பொருளாதார முன்னணியில், இன்று கலவையான நாளாக இருக்கும். பண விவகாரங்களில் இன்று கவனமாக இருப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். உங்கள் முரண்பாடான செயல்பாட்டால், அன்புக்குரியவர்கள் வேதனையடையலாம். உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
கன்னி - இன்று உங்கள் இயல்பில் சில மாற்றங்களை உணரலாம். உங்களது இனிமையான பேச்சால் அனைவரையும் வெல்வீர்கள். அரசு வேலையில் இருப்போர், இன்று மிகவும் பரபரப்பாக இருப்பர். அதிக பணிச்சுமை காரணமாக உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்காது. வணிகர்களுக்கு, எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் ஏமாற்றமடையலாம். இருப்பினும், அதிக மன அழுத்தத்தை எடுக்க தேவையில்லை. படிப்படியாக நிலைமையில் முன்னேற்றத்தைக் காணலாம். இன்று செலவுகளை சரிபார்த்துக் கொள்வது நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், உங்களுக்கு இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை
துலாம் - இன்று நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். மனம் அமைதியாக இருக்கும். திட்டமிட்ட அனைத்து பணிகளும் நிறைவடையும். உத்தியோகஸ்தர்கள் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். விரும்பிய மாற்று வேலையாக இருக்கலாம் அல்லது வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பாக கூட இருக்கலாம். வணிகர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். பண நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தினால், விரைவில் கடன்களிலிருந்து விடுபடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை
விருச்சிகம் - உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் மாறி, முன்னேற்றம் அடைவீர்கள். இதனால், இழந்த நம்பிக்கை மீண்டும் திரும்பும். குடும்பத்தில் அமைதி நிலவும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இன்று ஏற்ற நாள். இருப்பினும், லாபத்திற்காக தவறான பாதையை பின்பற்ற வேண்டாம். திருமண வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையில் அன்மையும், ஆதரவையும் பெறுவீர்கள். ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 8:15 மணி வரை
தனுசு - இன்று நீங்கள் சிந்திக்காமல் எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக அதீத நம்பிக்கையுடன் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். சுய தொழில் செய்வோர் இன்று நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். இன்று நெருங்கிய உறவினர் அல்லது நண்பருக்கு நிதி ரீதியாக உதவலாம். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உடல்நிலையைப் பற்றிப் பேசும்போது, வேலையை போல ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை
மகரம் - பொருளாதார முன்னணியில், இன்று நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். சமீபத்தில் எடுத்த சில முக்கிய நிதி முடிவால், நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெற்றிடலாம். இது தவிர, பணம் தொடர்பான எந்தவொரு பெரிய வேலையையும் இன்று தாராளமாக செய்யலாம். உத்தியோகஸ்தர்கள், கடின உழைப்பை செலுத்திய போதிலும், நல்ல பலன்களைப் பெறாமல் ஏமாற்றமடைவீர்கள். மாற்று வேலையை பற்றி யோசிப்பது நல்லது. வணிகர்கள் இன்று பெரிய நிவாரணத்தைப் பெறலாம். தடைப்பட்ட நிதியை பெற்றிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் ஆனந்தமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை
கும்பம் - இன்று வணிகர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். சில முக்கியமான வேலைகளில் பெரிய தடை உண்டாகலாம். இந்த பணியில் சிலவற்றை முடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் சோம்பலைக் கைவிட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களுடன் தேவையின்றி பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லையெனில், சில சிக்கலில் சிக்கக்கூடும். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். பெரிய செலவுகள் செய்வதைத் தவிர்க்கவும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 11:00 மணி வரை
மீனம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் சிறந்த செயல்திறன் மூலம் எந்த பெரிய வெற்றியையும் அடைய முடியும். வர்த்தகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் இனிமை அதிகரிக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் நன்றாக இருக்கும். சிறு செலவுகள் அதிகரிக்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் 10:00 மணி வரை