பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன, அதில் அப்படி என்ன இருக்கு? என்ன செய்ய வேண்டும்!

ஆன்மிகத்தில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3.30 முதல் 6.00 மணி வரை. இந்த நேரத்தில் தேவர்களும், பித்துருக்களும் ஒவ்வொருவரின் வீடு தேடி வருவார்கள்.

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன, அதில் அப்படி என்ன இருக்கு? என்ன செய்ய வேண்டும்!

ஆன்மிகத்தில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3.30 முதல் 6.00 மணி வரை. இந்த நேரத்தில் தேவர்களும், பித்துருக்களும் ஒவ்வொருவரின் வீடு தேடி வருவார்கள்.

தேவர்கள், தேவதைகள், திருமால், சிவபெருமான், மகாலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் வான்வெளியிலிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால் பெண்கள் காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போடவேண்டும்.

அந்த நேரத்தில் லட்சுமிதேவி வீதி உலா வந்து, வீட்டிற்குள் நுழைந்து ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளையும் சேர்க்க வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காவிட்டாலும், பல் துலக்கி, முகம், கை, கால் கழுவி விட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றுவதன் மூலம் விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் நீங்காமல் இருக்கும்.

அதிலும், அதிகாலை 4 மணியில் இருந்து 4.30 மணி வரை, தீபத்தை ஏற்றிவைப்பது கூடுதல் விசேஷம். அதே சமயம் 5.30 மணிக்குள் பொங்கல் வைத்து முடித்து விடுவது சிறப்பானது. திருமணம், வீடு கிரகப்பிரவேசம், உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை காலை 6 மணிக்கு மேல் 12 மணிக்குள் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் கூடும். மனக்குழப்பங்கள் மனோபயங்களும் விலகும். பிரம்ம முகூர்த்தத்தில் முன்னோரை நினைத்தால் மும்மடங்கு பலன் கிட்டுமாம்.

ஆனால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதை பெண்கள் மாதவிடாய் நேரத்தில் தவிர்க்கலாம். இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் இந்த நேரத்தில் குளிக்காமல் விளக்கு ஏற்ற கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.  

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0