இன்று இந்த ராசிக்காரர்கள் பொய் சொல்லாம இருக்குறது நல்லது…

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 08 வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் பொய் சொல்லாம இருக்குறது நல்லது…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உங்களது கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறாமல் போகலாம். அதற்கான அதிக மன அழுத்தம் கொள்ள தேவையில்லை. வரும் நாட்களில் உங்கள் கடின உழைப்பு நிச்சயமாக வெற்றி பெறும். வர்த்தகர்கள் அவசர முதலீடுகளை தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டாம். நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், சத்தான உணவுகளை உட்கொண்டு, போதுமான ஓய்வெடுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 3 மணி வரை

ரிஷபம் - பணத்தின் அடிப்படையில் இன்று மிகவும் நல்ல நாள். திடீரென்று ஒரு பெரிய நிதி நன்மை ஏற்படலாம். இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். அது மட்டுமல்லாமல், பழைய குடும்பக் கடன்களை இன்று செலுத்திட முடியும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். திருமண வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் அன்பை வெளிப்படுத்த முழு முயற்சிகளையும் மேற்கொண்டாக வேண்டும். காதல் வாழ்க்கைப் பற்றி பேசும் போது, அன்புக்குரியவருடனான உறவில் வெளிப்படைத்தன்மையை வைத்திருங்கள். எந்தவிதமான பொய்யையும் நாட வேண்டாம். வேலை முன்னணியில் இன்று நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்  - இன்றைய தினம் உங்களது இயல்புகள் சில மாற்றங்களை காணலாம். இதனால், திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கடந்த சில எடுத்த சில தவறான முடிவுகளால் மன அமைதி குலைந்து, தனிமையாக உணருவீர்கள். அத்தகைய சூழலில், நெருக்கமான நபர்களுடன் மனம் விட்டு பேசுவதால் நன்றாக உணருவீர்கள். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மையைப் பெறலாம். வேலை முன்னணியில், இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம், சரியான நேரத்தில் பணிகளை முடிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6:40 மணி வரை

கடகம் - இன்று பொருளாதார முன்னணியில் நல்ல நாள். வருமான அதிகரிப்பால், உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். மேலும், இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையை கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். இன்று வர்த்தகர்கள் திடீரென்று ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசினால், நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால், இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக மாறலாம். நீண்ட காலமாக இருவருக்குமிடையே இருந்துவந்த தவறான புரிதல்கள் இன்று முடிவடையக்கூடும். அன்புக்குரியவருடன், மனதிற்கு பிடித்த இடத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:20 மணி முதல் மாலை 4:30 மணி வரை

சிம்மம் - இன்று அலுவலக சூழல் நன்றாக இருப்பதோடு, உங்களது செயல்திறனும் மேம்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள், அனைத்து முயற்சிகளும் இன்று நல்ல பலனளிக்கும். இது மனதை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிப்பதோடு, புரிதலும் மேம்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், இன்று சிக்கலில் சிக்கலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், சிந்தனையுடன் செலவு செய்வது நல்லது. இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். இன்றைய தினம் பயணத்திற்கு நல்லதல்ல.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5:15 மணி வரை

கன்னி - நீங்கள் இன்று வேலை தொடர்பாக பயணம் செய்கிறீர்கள் என்றால், முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க மறக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று எந்த கவலையும் கொள்ள தேவையில்லை. அலுவலக பணிச்சுமை காரணமாக இன்று கூடுதுல் நேரத்தை அலுவலகத்தில் செலவிட வேண்டிவரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை கூடும். இன்று உடன்பிறப்புகளுடன் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். அத்தகைய சூழலில் கோபத்தை கைவிடுவது நல்லது. பண வரவு திருப்தியளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

துலாம்  - இன்று குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். மறுபுறம், வாழ்க்கைத் துணையின் மனநிலை இன்று சரியாக இருக்காது. சிறு விஷயத்திற்காக சண்டை ஏற்படலாம். இருப்பினும் விரைவில் எல்லாம் சரியாகும். அலுவலகத்தில் வெட்டி பேச்சுக்களில் இருந்து விலகி இருங்கள். குறிப்பாக, சக ஊழியர்களை விமர்சிப்பதைத் தவிர்த்திடவும். வர்த்தகர்கள், இன்று தங்களது எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் நிதி கரையலாம். இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள உகந்ததல்ல. குறிப்பாக நீண்ட பயணங்களை தவிர்த்திடுங்கள். இன்று மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணருவீர்கள். அப்படி பயணம் மேற்கொண்டாலும், உங்கள் நோக்கம் நிறைவேற வாய்ப்பில்லை.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை

விருச்சிகம் - நீங்கள் பிரச்சனையில் இருந்தால், பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். இதனால் பிரச்சனைக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்கும். வேலை முன்னணியில் இன்று கடினமாக உழைப்பீர்கள். உங்களது பணிகள் எவ்வித இடையூறும் இன்றி சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழில் செய்வோர் விவாதங்களை தவிர்க்காவிட்டால், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல்நல குறைபாட்டால் கவலை அதிகரிக்கும். இந்த நேரத்தில் அவர்களை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கவும். இன்றைய தினம் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இன்று ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் 12:20 மணி வரை

தனுசு - அலுவலகத்தில் உங்களது கவனக்குறைவால் சில சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் உயர் அதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும். வேலையில் முழு கவனத்தை செலுத்தி முடிக்க முயற்சிக்கவும். வணிர்கள் புதிய வணிப சலுகையைப் பெறலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சிறப்பான நாள். வருமானத்தை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இன்று தந்தையின் உதவியுடன் நிதி ரீதியாக பயனடையலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் 5:20 மணி வரை

மகரம் - திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், எந்தவொரு துறையிலும் வெற்றியை அடைய உங்களுக்கு திறமை உள்ளது. எனவே, உங்கள் இலக்கை மையமாகக் கொண்டு செயலாற்றுங்கள். இந்த நேரத்தில் வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். மேலும், முக்கியமான பணிகளை விரைவாக முடிக்க முயற்சிப்பீர்கள். சிறப்பு வழிபாட்டிற்கு வீட்டில் ஏற்பாடு செய்யப்படலாம். குடும்பத்தினருடன் நேரத்தை சிறப்பாக செலவிட முடியும். இன்று எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்கவும். இல்லையெனில், விஷயங்கள் உங்களுக்கு எதிராக செல்லக்கூடும். மேலும், இன்று நீங்கள் பெரிய சிக்கலில் சிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் கடின உழைப்பிற்கான சரியான முடிவுகளைப் பெறலாம். பதவி உயர்வு பெறுவதற்கும் வலுவான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வர்த்தகர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் பணி ரியல் எஸ்டேட் தொடர்புடையது என்றால், நீங்கள் எதிர்பார்த்த முடிவை இன்று பெறுவீர்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இன்று நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். இன்று குடும்பத்துடன் சந்தோஷமான நாளாக இருக்கும். தேவைப்பட்டால் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று பரபரப்பான நாளாக இருந்தபோதிலும், நீங்கள் இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனமாகவும். நிதானமாகவும் செயல்படவும். இன்று நன்கு செலவழிக்கும் மனநிலையில் நீங்கள் இருப்பீர்கள். அதற்கேற்ப எதிர்பார்த்த பண வரவும் உண்டு. குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கலாம். பழைய பிரச்சனையால் வீட்டின் அமைதி கெடக்கூடும். பாதியில் நின்று போன சில முக்கியமான வேலைகளை முடிப்பதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது. வியாபாரிகள், அதிகப்படியான நம்பிக்கையுடன் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பிறரிடம் வழங்கப்படும் சில முக்கிய பொறுப்புகளால், சிக்கல்களை சந்திக்கக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தை பற்றி பேசினால், இரவில் தாமதமாக தூங்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

like

dislike

love

funny

angry

sad

wow