இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லதாம்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லதாம்…

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 15  திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் சாத்தியமாகும். ஏதாவது கருத்து வேறுபாடுகள் விவாத பொருளாக மாறலாம். ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும். இல்லையெனில் உறவில் விரிசல் அதிகரிக்கக்கூடும். பொருளாதார முன்னணியில், நல்ல நாள். ஒரு பெரிய நிதி நன்மையை பெற வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கக்கூடும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை தொந்தரவு செய்யலாம். மேலும், வீடடு தொல்லைகளும் மனதில் அதிகரிக்கும். குழந்தைகள் இன்று உங்களுடன் அதிக நேரம் செலவிட கேட்கலாம். நீங்கள் அவர்களை ஏமாற்றி விடாதீர்கள். உங்களை உற்சாகமாக வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் சிறிய உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம் - திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலையுயர்ந்த நாளாக இருக்கும். கடன்களை விரைவாக அடைக்க வேண்டுமெனில், நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்கள் படிப்பில் இருக்கும் இடையூறுகளை சமாளிக்க முடியும். பணிச்சுமை இன்று குறைவாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்காக கூடுதல் நேரத்தைப் பெற முடியும். அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மிதுனம் - உங்கள் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தக்கூடிய நபர்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். அன்புக்குரியவருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இது உங்கள் உறவை இன்னும் பலப்படுத்தும். உங்கள் அலட்சியம் அலுவலகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, வேலையை கவனமாக செய்யுங்கள். வர்த்தகர்கள் லாபம் ஈட்ட ஒரு வாய்ப்பைப் பெறலாம். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் ஒன்றைச் செய்வதைத் தவிர்க்கவும். நிதி நிலைமை பற்றி பேசினால், இன்று சாதாரணமாக இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கடகம் - பொருளாதார முன்னணியில் இன்று ஒரு நல்ல நாள். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். மேலும், நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை முன்னணியில் இன்று மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்று அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், உங்களது அனைத்து பணிகளையும் கடின உழைப்பு மற்றும் புரிதலுடன் சிறப்பாக செய்ய முடியும். திருமண வாழ்க்கையில் நன்றாக இருக்கும். உறவு வலுவாக இருக்கும். காதல் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தம் சாத்தியமாகும். நீங்கள் வீட்டு உறுப்பினருடன் விவாதிக்கலாம். அவற்றை சரி செய்வதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம் - குடும்ப முன்னணியில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். பெற்றோரிடமிருந்து ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உத்தியோகஸ்தர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். வர்த்தகர்கள் சட்ட விஷயங்களில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பணத்தைப் பற்றி பேசினால், நிதி இழப்பு இன்று சாத்தியமாகும். இன்று பணம் தொடர்பான எந்த பெரிய வேலையும் செய்ய வேண்டாம். இன்று, எந்தவொரு நாட்பட்ட நோயும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே, அலட்சியமாக இருக்கக்கூடாது. சிகிச்சையை சரியாக மேற்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி  - குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டில் ஒரு சிறிய விருந்திற்கு திட்டமிடலாம். அன்புக்குரியவர்களுடனான அனைத்து சச்சரவுகளும் விலகிவிடும். நிதி ரீதியாக, இன்று உங்களுக்கு நல்லதாக இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிப்பு இருக்கும். குடும்ப பிரச்சனைகள் அல்லது சிக்கலான வேலை தொடர்பான சிக்கல்கள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் சில முக்கியமான வேலைகளை உங்களிடம் ஒப்படைக்கலாம். நீங்கள் நம்பிக்கையுடன் பேசி முடிக்க வேண்டும். வணிகர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உடல்நிலை பற்றி பேசினால், இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 மணி முதல் மதியம் 12:05 மணி வரை

துலாம்  - இன்று வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், சர்ச்சைகளில் ஈடுபடலாம். பண நிலைமை சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். பொருளாதார பரிவர்த்தனைகள் செய்வதற்கு உகந்த நாள் அல்ல. உத்தியோகஸ்தர்கள் எல்லா பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில் முதலாளி இன்று எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்கக்கூடும். தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர் இன்று மிகவும் பயனடையலாம். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் அவர்களை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் உறவில் நல்லிணக்கம் இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், இன்று நீங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் வலியால் கலங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

விருச்சிகம் - உத்தியோகஸ்தர்கள், இன்று கடினமாக உழைத்து உயர் அதிகாரிகளின் உள்ளங்களை கவருவர். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். நிதி நிலைமை பற்றி பேசினால், இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். கூட்டு வணிகத்தில் செல்வதைத் தவிர்ப்பது வணிகர்களுக்கு நல்லது. இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடன் பிறப்புகளிடமிருந்து ஒரு பரிசைப் பெறலாம். மேலும், அவர்களின் எந்தவொரு ஆலோசனையும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், அதிகரிக்கும் எடையை கட்டுப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

தனுசு - வர்த்தகர்களின் சிரமங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. வணிகத்தின் மந்தநிலை காரணமாக, இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். இந்த சிக்கல்கள் விரைவில் நீங்கும். இன்று, வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடலாம். மற்றவர்களின் கோபத்தை உங்கள் துணையின் மீது செலுத்த வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவதை நீங்கள் உணருவீர்கள். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மகரம் - இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் எல்லா முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் பதவியை அடைவதால் வருமானமும் அதிகரிக்கும். பணம் நல்ல நிலையில் இருக்கும். இருப்பினும், பெரிய நன்மைகளுக்கு, உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். கோபத்தை குறைத்தால், வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பை குறைத்திடலாம். திருமணமாகாதவராக இருந்தால், திருமண திட்டம் இன்று கைகூடும். இன்று உங்கள் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். உடல் ரீதியாக நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கும்பம்  - உங்கள் நேர்மறையான சிந்தனை இன்று உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியரிடமிருந்து சில தவறான புரிதல்கள் இருக்கலாம். உங்கள் நடத்தையை சீரானதாக வைத்திருக்க வேண்டும். இது தவிர, இன்று உங்கள் வேலைகளை வேகமாக முடிக்க முயற்சிக்கவும். அலட்சியம் தீங்கு விளைவிக்கும். பொருளாதார முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை சற்று பதற்றமாக இருக்கும். பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். உங்கள் தவறான அணுகுமுறை அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கக்கூடும். அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வது நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10:30 மணி வரை

மீனம்  - உங்கள் தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக இன்று உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நல்லது. இன்று சிறிது மன அழுத்தத்தை உணர்கிறீர்கள் என்றால், ஓய்வெடுக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அன்பானவர்களுடன் உங்கள் இதயத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள், இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். வியாபாரிபள், பெரிய வேலைகளை செய்ய சரியான நாள் அல்ல. உத்தியோகஸ்தர்கள் நிலுவையில் உள்ள பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0