இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பணம் தொடர்பான விவாதங்களை தவிர்க்கணும்…

இந்த வாரம், அதாவது மார்ச் 14, 2021 முதல் மார்ச் 20, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பணம் தொடர்பான விவாதங்களை தவிர்க்கணும்…

அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள். 

மேஷம் - இந்த வாரம் உங்கள் உடல்நலம் பலவீனமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்தவிதமான கவனக்குறைவிற்கும் இடம் கொடுக்காதீர்கள். குறிப்பாக உணவில் கவனம் செலுத்துவது நல்லது. பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்காக நிறைய பணம் செலவிட வேண்டியிருக்கும். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த வாரம் முன்னேற உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். வணிகர்கள் இன்று லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க முயற்சித்தால், உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

ரிஷபம் - வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். வணிகர்கள் லாபம் பெற வேண்டுமெனில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகள் வார இறுதியில் ஒரு பெரிய நன்மையைப் பெறலாம். பணத்தைப் பற்றி பேசுகையில், நிதி முடிவுகளை கவனமாக எடுக்கவும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். எனவே, உங்களுக்கு சிறந்த நிதித் திட்டமும் தேவை. திருமண வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் காதல் வளரும். பெற்றோரின் முழு ஆதரவும் இருக்கும். வார இறுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். உடல்நலம் பற்றிப் பேசினால், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையின் சில விஷயங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இந்த வாரம் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மிதுனம் - இந்த வாரம் சில பெரிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் பாதையில் எதிரிகள் சில பெரிய தடைகளை உருவாக்கலாம். புத்திசாலித்தனமாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில், எந்தவொரு பெரிய குடும்ப பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். அன்புக்குரியவர்களுடனான உறவு வலுவாக இருக்கும். ஒருவருக்கொருவர் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் நல்ல வாய்ப்பைப் பெறலாம். பணம் தொடர்பான விவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு உயர் இரத்த அழுத்த புகார் இருந்தால், திடீரென்று உடல்நலம் மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

கடகம் - இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல பலனைத் தரப்போகிறது. நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் பொருளாதார முயற்சியில் இந்த வாரம் வெற்றிபெற வாய்ப்புள்ளது. குறைந்த முயற்சியில் நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கலாம். மேலும் பழைய கடன்களிலிருந்தும் விடுபடலாம். உடல்நலம் பற்றி பேசினால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அலுவலகத்தில் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்படலாம். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். அரசு பணியாற்றுவோருக்கு மிக முக்கியமான வாரமாக இருக்கும். வர்த்தகர்கள் முதலீடு செய்ய ஒரு நல்ல வாய்ப்பைப் பெறலாம். உணவகங்களில் பணிபுரிவோர் இந்த காலகட்டத்தில் நல்ல நிதி சலுகைகள் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டு உறுப்பினரால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம் - இந்த காலகட்டத்தில், கடவுள் வழிபாட்டில் ஆர்வம் சற்று அதிகரிக்கக்கூடும். நிதி ரீதியாக சிலருக்கு உதவலாம். வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் விரைவில் எல்லாம் சாதாரணமாகும். இருப்பினும், உங்கள் கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் தாயின் ஆரோக்கியம் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களின் உடல்நிலை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் குழப்பம் இருந்தால், நல்ல ஆலோசகரை அணுக வேண்டும். அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறலாம். இந்த வாரம் நீண்ட பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கன்னி - இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சச்சரவுகள் இருக்கும். வீட்டின் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்க கடுமையாக முயற்சிப்பீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில், உங்கள் முயற்சிகள் வெற்றியடையக்கூடும். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். வீட்டின் இளைய உறுப்பினர்களுடன் மென்மையாகவ நடக்கவும். இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை கொடுக்க முயற்சிக்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உங்களுக்காக திறக்கப்படலாம். வேலை அல்லது வணிகத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வார இறுதியில், ஒரு பெரிய சிக்கலை தீர்க்க முடியும். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: புதன்

துலாம் - இந்த வாரம் உங்களுக்கு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும். இந்த வாரம் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். காதல் திருமணம் செய்ய விரும்புவோர், இந்த விஷயத்தில் உங்கள் குடும்பத்தினருடன் பேச சாதகமான நேரம். பணத்தின் நிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் பெரிய பிரச்சனை இருக்காது. உங்கள் வருமானம் அதிகரிக்க உங்கள் முயற்சியை விரைவுபடுத்த வேண்டும். வாரத்தின் ஆரம்பம், உத்தியோகஸ்தர்களுக்கு நன்றாக இருக்கும். திட்டமிட்ட படி உங்கள் எல்லா வேலைகளையும் முடிக்க முயற்சிப்பது நல்லது. வர்த்தகர்கள் இந்த காலகட்டத்தில் பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம். பணத்தைப் பொறுத்தவரை, கண் மூடித்தனமாக யாரையும் நம்பாதீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, இந்த வாரத்தில் தோல் தொடர்பான பிரச்சனை உங்களுக்கு இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 42

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

விருச்சிகம் - வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். பாதகமான சூழ்நிலைகளில் கூட, நம்பிக்கையின் வலிமையில் எளிதாக வேலையை செய்ய முடியும். இந்த காலகட்டத்தில் சக ஊழியர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வர்த்தகர்கள் கடன் வழங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், வரும் நாட்களில் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஊடகங்கள், அரசியல், கல்வி, பேஷன் போன்றவற்றுடன் தொடர்புடையோருக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் காணப்படும். பணத்தைப் பொறுத்தவரை நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சிந்திக்காமல் செலவு செய்தால், அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

தனுசு - இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக நேரம் கிடைக்காமல் போகலாம். இதன் காரணமாக நீங்கள் அவர்களின் அதிருப்தியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைகளில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சில்லறை வர்த்தகர்கள் பெரும் பொருளாதார நன்மை அடைய முடியும். ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோர் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். உடல்நலம் சிறிது சரியில்லை என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: புதன்

மகரம் - பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். பெரிய நிதி சிக்கல்களில் சிலவற்றைத் தீர்க்கலாம். நீங்கள் உயர் கல்விக்கு முயற்சிக்கும் மாணவராக இருந்தால், இந்த வாரம் உங்கள் முயற்சியில் வெற்றி காணலாம். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் பொறுமையாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறார். இல்லையெனில், நீங்கள் ஒரு பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் வீட்டின் சூழ்நிலை சரியாக இருக்காது. வீட்டு பெரியவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. உடல்நலம் பற்றி பேசினால், சிகரெட் மற்றும் ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில், உங்கள் உடல்நலம் வெகுவாகக் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கும்பம்  - இந்த வாரம், பாதியில் நிறுத்தப்பட்ட சில வேலைகள் முடிவடையக்கூடும். இதனால் நீங்கள் நிம்மதி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இந்த வாரத்தில் ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை தேடுபவர்கள் இந்த காலகட்டத்தில் விரும்பிய வேலையைப் பெறலாம். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். வணிகர்கள் ஒரு புதிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். எந்தவொரு நற்செய்தியையும் உடன் பிறப்புகளிடமிருந்து பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதத்தைத் தவிர்க்கவும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சி செய்யுங்கள். தனிப்பட்ட விவகாரங்களில் மூன்றாம் நபரை தலையிட விடாமல் இருப்பது நல்லது. பண வரவு நல்ல நிலையில் இருக்கும். இந்த காலகட்டத்தில், வீட்டு வசதிகளுக்காக சிறிது பணம் செலவிடலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு இதய நோய் இருந்தால், இந்த நேரத்தில் அதிக விழிப்புடன் இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

மீனம் - இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில், பணத் தகராறு ஏற்படலாம். இருப்பினும், இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் சோம்பலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இது தவிர, இந்த காலகட்டத்தில் கடன் வாங்குவதில் தவறு செய்ய வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். திருமண வாழ்க்கை இந்த வாரம் நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த வாரத்தில் ஒரு சிறிய சிக்கல் இருந்தாலும், அதை புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0