இந்த ராசிக்கார மாணவர்கள் இன்றைய தினம் சில தடைகளை சந்திக்க நேரிடும்!

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பார்க்கலாம். 

இந்த ராசிக்கார மாணவர்கள் இன்றைய தினம் சில தடைகளை சந்திக்க நேரிடும்!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - நீங்கள் வியாபாரியாக இருந்தால் இன்று நல்ல லாபம் காண முடியும். பண கவலைகளில் இருந்து விடுபடலாம். வேலை தேடுவோருக்கு இன்று நல்ல வாய்ப்பு தேடி வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். சில முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்கப்படும். நாளின் இரண்டாம் பாகத்தில் மகிழ்ச்சியான சில நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தாருடனும், நண்பர்களுடம் நாளை சந்தோஷமாக செலவிடலாம். அன்புக்குரியவருடனான பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும். தவறாமல் யோகா மற்றும தியானம் செய்ய மறவாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

ரிஷபம் - அலுவலகத்தில் வேலை பளு குறைவாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். வர்த்தவர்கள் இன்றைய தினம் எடுக்கும் சில முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். குறிப்பாக புதிய தொழில் குறித்த முடிவுகளில் அவசரம் காட்ட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களது கவனக்குறைவால் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். விவாதங்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் பற்றி பேசினால், உணவு, பானங்களில் அதிக கவனம் தேவை. வறுத்த, பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். பழங்கள், காற்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட மதிப்பெண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

மிதுனம் - பொருளாதார முன்னணியில் இன்று மிகவும் கடினமாக இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தை பற்றிய முடிவுகளை கவனமாக எடுப்பது நல்லது. அலுவலகத்தில் இன்று நீங்கள் நேரத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வணிகர்களுக்கு இன்று சிறப்பான நாள். எந்தவொரு சட்ட விஷயங்களிலும் நல்ல தீர்வை காண்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

கடகம் - இன்றைய தினம் சற்று சுமாராக தான் இருக்கும். அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பலவீனமடையலாம். இதுபோன்ற விஷயங்களை, அமைதியாக கையாளவது நல்லது. குடும்பத்தில் சில விஷயங்களை புறக்கணிப்பதன் மூலம் வீட்டின் அமைதியை கொண்டு வர முடியும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சரியாக நடந்து கொள்ள முயற்சியுங்கள். கோபத்தால் அன்புக்குரியவரிடம் இருந்து விலக நேரிடலாம். உடல்நலம் பற்றி பேசும் பேது, மனஅழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தையும் கட்டுப்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மாலை 3:30 மணி வரை

சிம்மம் - நிதி நெருக்கடிகளைத் தவிர்க்க, நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த நாளில் ஏமாற்றத்தை அடையலாம். ஆனால் முயற்சியை கைவிடாதீர்கள். விரைவில் உங்கள் கடின உழைப்பிற்கான பலனை பெறலாம். அலுவலகத்தில் அதிகம் பேசாமல் கவனமாக வேலை செய்ய வேண்டும். நேரத்தை முழுமையாக கவனித்து பயன்படுத்த வேண்டும். இன்று வணிகர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி இருக்கும். இருப்பினும், அன்பானவர்களுக்காக உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று முதுகு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கன்னி - இன்று நாளின் தொடக்கம் நன்றாக இருக்கும். நீங்கள் நேர்மறையாக உணருவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பீர்கள். இன்று, நீங்கள் தெய்வ வழிபாட்டிற்கு அதிக நேரம் ஒதுக்குவீர்கள். இல்லாதவர்களுக்கு உதவலாம். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறவில்லை என்றாலும், பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எந்தவொரு முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இன்று சாதகமான நாள் இல்லை. வணிகர்கள் அவசரமாக எந்த வேலையும் செய்யாமல் இருக்கவும். அதிகப்படியான ஆர்வம், சில இழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை, கவலை கொள்ள தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

துலாம் - பேச்சு திறனால் எத்தகைய சூழலையும் உங்களுக்கு சாதகமாக மாற்றும் திறனுடையவர் நீங்கள். புரிதல் மற்றும் செயல் திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். இன்று வணிகர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கடன் வாங்க திட்டமிட்டிருந்தால் இன்று சரியாக நாள் கிடையாது. வரவு செலவிற்கு இடையே சமநிலையை பராமரிக்க முயற்சிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூரில் பணிபுரிபவர்கள், அன்புக்குரியவர்களுடன் நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

விருச்சிகம் - நிதி முதலீடுகளின் அடிப்படையில் இன்றைய தினம் நல்ல பலன்களை பெற்றிடலாம். பழைய கடன்களை திருப்பி செலுத்த வாய்ப்புள்ளது. தடைப்பட்ட வேலைகளை மீண்டு தொடர நல்ல நாள். அலுவலகத்தில், உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதோடு, சாதகமான முடிவுகளையும் பெறலாம். பங்கு சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலனை பெற்றிடலாம். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். விடா முயற்சியினால் பிரச்சனைகளை சுலபமாக சமாளித்திட முடியும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம். நீண்ட தூரம் ஓடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

தனுசு - இன்று வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று திட்டமிட்ட படி பணிகள் அனைத்தும் நிறைவடையும். உங்களுக்கு வேலை அல்லது தொழிலில் இன்று வெற்றி கிடைக்கும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். போதுமான பணம் இல்லாததால், நிறுத்தப்பட்ட பணிகள் இன்று நல்ல முறையில் நிறைவடையும். உங்களது நீண்ட கால கவலைகள் இன்று நீங்கும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகள் உருவாகலாம். குடும்பத்தில் ஒருவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடு உருவாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

மகரம் - இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பீர்கள். இன்று உங்கள் முழு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். சில குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியடைய செய்ய புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். பண விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில், தவறான முடிவை சந்திக்க நேரிடும். வணிகர்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உடல்நிலை குறித்து வரும்போது, மிகவும் கோபப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம் - உடல்நலத்தை மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய நாள். குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இன்றைய தினம் ஓய்வெடுப்பது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியப் போக்கை தவிர்த்திடவும். நிதி நிலைமை வலுப்படுத்த வேண்டுமெனில், வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பண பரிவர்த்தனைகளை மிகவும் யோசித்து செய்ய வேண்டும். வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் உதவ முன்வருவர். வாழ்க்கை துணையுடனான உறவு வலுப்பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 முதல் 10:10 மணி வரை

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாள். பெரிய வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். இதனால், உங்களது வேலைகளை எளிதாக முடிக்க முடியும். வணிகர்களுக்கு இன்று நற்செய்தி தேடி வரலாம். வீட்டில் சுபநிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளது. பண வரவு திருப்தியளிக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக முக்கியமான பணிகளை முடிக்க உங்கள் நேரத்தை பயன்படுத்துங்கள். இன்று திருமண வாழ்க்கையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 9:15 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0