இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…

இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 21 வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - அதிகப்படியான உடல் சோர்வு காரணமாக, இன்று உங்கள் உடல்நலம் குறையக்கூடும். உத்தியோகஸ்தர்கள் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. நிலுவையில் உள்ள அலுவலக பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகள், தங்களது நீண்ட கால சிக்கலில் இருந்து விடுபட புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அதிகப்படியான ஆர்வத்துடன் எந்த வேலையை செய்தாலும், பிரச்சனையிலேயே முடியும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்வை ஏற்பாடு செய்யலாம். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். சில பெரிய செலவுகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம் - தேவையில்லாத விஷயங்களுக்கு கவலைப்படுவதைத் தவிர்க்கவும். பயனற்ற விஷயங்களுக்காக உங்களது பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் மெதுவாக வேலை செய்வது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். வேலையை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். இன்று வர்த்தகர்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கப்போகிறது. வாழ்க்கைத் துணையின் கடுமையான அணுகுமுறை சில சச்சரவுகளை ஏற்படுத்தும். உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

மிதுனம் - வேலையுடன் சேர்த்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனையால் வாங்கிய கடனால் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் சகாக்களை விமர்சிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களுடைய இந்த பழக்கத்தின் காரணமாக இன்று சற்று சிக்கலை சந்திக்கக்கூடும். வர்த்தகர்கள் வேலை தொடர்பாக திடீரென பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் பயணம் இனிமையாக இருக்கும். மேலும், இதனால் உங்களுக்கு நிதி நன்மையும் கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை

கடகம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விரைவில் நீங்கள் பணம் தொடர்பான அனைத்து சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம். இன்று அலுவலக வேலைகளில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். இருப்பினும், மாலை நேரத்தில் எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடியும். உங்கள் பணி இறக்குமதி ஏற்றுமதியுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியும். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். இதனால் அவருடைய இதயத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியும். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம் - இன்று உங்களுக்கு நல்ல நாள். புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு இருந்துவதந் நிதி சிக்கல்கள் அனைத்தும் அகலும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இன்று ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் உயர் அகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எந்த விலைமதிப்பற்ற பொருளையும் வாங்கி கொடுக்கலாம். உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இடுப்பு அல்லது முதுகு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். வியாபாரிகள் தங்களது நீண்ட கால வணிகத் தடைகளை போக்க வேண்டுமெனில், அனுமனை வணங்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான உறவு நன்றாக இருக்கும். பிறருடனான மோதல் போக்கை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாலையில் வீடு தேடி வரும் நற்செய்தியால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10 மணி வரை

துலாம் - எதிர்கால கவலைகளால், நிகழ்காலத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். வெற்றி பெற வேண்டுமெனில், கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருக்க பழகுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மையை பெற்றிட முடியும். சிறு வணிகர்கள் சட்ட சிக்கல்களில் சிக்காமல் நடந்து கொள்ளவும். வீட்டில் இன்று பதற்றமான சூழல் நிலவும். பொறுமையை கையாளுவதன் மூலம் பிரச்சனை தீர்க்கப்படும்.

அதிர்ஷ்டு நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம் - இன்று எந்தவொரு முக்கியமான முடிவையும் கவனமாக எடுக்கவும். மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் இன்று அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமான பணியை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், கடின உழைப்பால் நீங்கள் நல்ல வெற்றியை அடைவீர்கள். இன்று வணிகர்களுக்கு நன்மை பயக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். குறிப்பாக இன்று வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தொற்று ஏற்படலாம். எனவே, ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு - இன்று உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் விரைவில் வெற்றி பெறுவீர்கள். அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். ஒரு முக்கியமான பணியை முடிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சொந்த தொழில் தொடங்க நீங்கள் திட்டமிட்டால், சரியான ஆலோசனையுடன் முன்னேறலாம். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று பெற்றோரிடமிருந்து ஒரு சிறப்பு பரிசைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிப்பு இருக்கும். அன்புக்குரியவருடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம் - இன்று நீங்கள் மனஅமைதியை இழக்க நேரிடலாம். அத்தகைய சூழலில் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் மோதல் போக்கை தவிர்க்கவும். இல்லையெனில், வேலையை இழக்க நேரிடும். இன்று வர்த்தகர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உணவு பொருட்களை வர்த்தகம் செய்வோர் இன்று நல்ல பலனைப் பெறலாம். இன்று தந்தையின் கோபத்திற்கு ஆளாகலாம். பிறர் மனம் புண்படும்படி நடந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று அதிக செலவுகள் செய்வதை தவிர்க்கவும். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம் - அலுவலகத்தில் பணிபுரியும் போது அவசரப்பட வேண்டாம். இன்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், உங்கள் வேலையை அமைதியான மனதுடன் செய்ய வேண்டும். வேலை தேடுவோருக்கு, நிறைய முயற்சிகளுக்குப் பிறகு இன்று நற்செய்தி தேடிவரும். இன்று பெரிய பொருளாதார பரிவர்த்தகனைகளை தவிர்க்கவும். கூட்டு வியாபாரிகள், தங்கள் கூட்டாளருடன் எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்கவும். வீட்டில் இன்று சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் கருத்து மோதல் உண்டாகலாம். வீட்டில் பிறரது விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்கவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நிலைமைப் பொறுத்தவரை, மிகவும் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம் - உடல்நலம் தொடர்பான விஷயத்தில் இன்று சில தவறுகள் ஏற்படலாம். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான சிக்கல் இருக்கலாம். எனவே, தூய்மையைக் கவனித்துக்கொள்வது நல்லது. அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவார். சக ஊழியர்களிடையே உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகள், பெரிய லாபங்களுக்காக அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உடன்பிறப்புகளுக்கு இன்று ஒரு நல்ல வரன் தேடி வரக்கூடும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் இன்று எந்த பெரிய செலவையும் தாராளமாக செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0