இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 26 செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்
மேஷம் - இன்று நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் இயல்பில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இன்று பயனற்ற விஷயங்களிலிருந்து விலகி இருப்பதன் மூலம் உங்கள் வேலையில் கவனத்தை செலுத்த முடியும். வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எதிரிகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உங்கள் வழியில் தடைகளை உருவாக்க சிலர் முயற்சிப்பார்கள். அலட்சியமாக இருந்தால் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால், அந்த பிரச்சனையை மேலும் வளர விடாதீர்கள். உங்களுக்கிடையிலான தூரத்தை விரைவில் அகற்ற முயற்சிக்கவும். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு தொற்று, காய்ச்சல் போன்றவை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 9:15 மணி வரை
ரிஷபம் - இன்று நாளின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வேலையைப் பற்றி பேசினால், அலுவலக வேலையில் அழுத்தம் அதிகரிக்கலாம். அரசு வேலையில் இருப்போர் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறார்கள். அமைதியான மனதுடன் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று வர்த்தகர்கள் நல்ல பலனைப் பெறலாம். உங்கள் வணிக மேம்பாட்டிற்காக கடன் வாங்க விரும்பினால், இன்று உங்கள் முயற்சியில் வெற்றியைப் பெறலாம். இன்று, நீங்கள் சிந்தனையுடன் செலவிட அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் தொடர்பான சிறிய பிரச்சனையை சந்திக்கக்கூடும். எந்தவொரு தீவிரமான குடும்ப பிரச்சனையையும் தீர்க்க உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 10:10 மணி வரை
மிதுனம் - இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் அதிகப்படியான நம்பிக்கையின் பேரில், தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். அரசு வேலைக்கு முயற்சிப்போர், தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். நீங்கள் மாணவராக இருந்தால் எதிர்பார்த்த முடிவைப் பெறலாம். படிப்பை முடித்து வேலை தேடுவோருக்கு, இன்று ஒரு முக்கியமான நாளாக இருக்கும். வணிகம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது சண்டை ஏற்படலாம். அத்தகைய சூழலில் சொற்களைப் பார்த்து பயன்படுத்துவது நல்லது. உடல்நிலை இன்று நன்றாக இருக்கும். மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
கடகம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும். இன்று சிறு பிரச்சனை இருந்தால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகவும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிது பதற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவை நன்றாக வைக்க முயற்சி செய்யுங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் முக்கியமான வேலையைச் செய்யும்போது கவனக்குறைவாக இருக்காதீர்கள். வணிகர்கள் நிதி தடைகளை சந்திக்க நேரிடும். இன்று பொருளாதார முன்னணியில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, வரவிற்கு ஏற்ப செலவிட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மதியம் 2:25 மணி வரை
சிம்மம் - இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. குறிப்பாக உங்கள் பணி எண்ணெயுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். பாதகமான சூழ்நிலையில் முழு தைரியத்துடனும் கடின உழைப்புடனும் பணியாற்றுவீர்கள். உங்களுடைய செயல்திறனைப் பார்த்து உயர் அதிகாரிகள் மிகவும் பாராட்டுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்று, தந்தையின் உடல்நலம் குறித்த கவலை அதிகரிக்கக்கூடும். பொருளாதார கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உடல்நலம் வெகுவாகக் குறையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை
கன்னி - உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இது தவிர, அவர்களின் ஆலோசனைகளின்படி நடப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இறக்குமதி ஏற்றுமதி தொடர்பான வேலைகளை செய்வோர், இன்று சில நிதி இழப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்று நீங்கள் ஆறுதலளிக்கும் சில விஷயங்களுக்கு அதிக பணம் செலவிடுகிறீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உங்களது உறவு தீவிரமடையும். பாதகமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
துலாம் - உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பெரிய சிக்கல் இருந்தால், அதனை பொறுமையாக எதிர்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். பிரச்சனைகளை அதிகரிப்பது போன்ற செயலை செய்ய வேண்டாம். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்வோர் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். அலுவலகத்தில், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், சரியான நேரத்தில் உங்கள் வேலைக்கானப் பலனைப் பெறுவீர்கள். வேலையுடன், சேர்த்து ஆரோக்கியத்திற்கும் சமமாக முக்கியத்துவம் அளிக்கவும். உங்கள் அலட்சியம் உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை
விருச்சிகம் - இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமையை அதிகரிக்கும். இன்று நீங்கள் அன்புக்குரியவருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், திருமணம் கைகூடி வரப்போகிறது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளியின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல், சரியான நேரத்தில் முடிக்கப்படும். வணிகர்கள் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். பாதியில் நிறுத்தப்பட்ட சில பணிகள் முடிக்கப்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பொருளாதார பரிவர்த்தனைகள் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
தனுசு - அரசியல் தொடர்புடையோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வேலையில்லாதவர்கள் சிறந்த வேலைவாய்ப்பு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகள் இன்று முடிவடையும். கூட்டு தொழில் செய்வோருக்கு, இன்றைய தினம் சாதகமானது. இன்று நீங்கள் சில பழைய கடன்களைப் பற்றி கவலைப்படுவீர்கள். நிதி சார்ந்த முடிவுகளில் கவனம் செலுத்தி, சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இதனால் நீங்கள் கடனில் இருந்து விரைவாக விடுபட முடியும். வாழ்க்கைத் துணைக்கு போதுமான இடம் கொடுக்காவிட்டால், உங்களிடையே பதற்றம் அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதாரணமாக நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
மகரம் - இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். சோம்பலை விடுத்து வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று, சிறிய பணிகளைக் கூட மிகவும் கவனமாக கையாளவும். உங்கள் கடின உழைப்பு எதிர்வரும் நாட்களில் பெரும் பலனைத் தரும். மாற்று வேலை பற்றி யோசிப்போர், தங்கள் முடிவை கவனமாக எடுக்க வேண்டும். அவசரப்படுவதைத் தவிர்க்கவும். வணிகர்கள் இன்று பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். நாளின் இரண்டாம் பகுதியில் ஒரு பெரிய சிக்கல் இருக்கலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். திடீர் உறவினர் வருகையில் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கும்பம் - உத்தியோகஸ்தர்கள், இன்று ஒரு பெரிய மாற்றத்தை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் லாபம் ஈட்ட ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். நண்பர்களின் உதவியுடன், ஒரு முக்கியமான பணியை முடிக்க முடியும். இது உங்கள் பெரிய கவலையை நீக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் மதிப்புமிக்க ஒன்றை வாங்கலாம் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு வேடிக்கையான நாளை அனுபவிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை
மீனம் - இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள். ஒவ்வொரு சவாலையும் முழு தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு சில தகராறுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் சொற்களை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வியாபாரம் செய்வோருக்கு, இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு பெரியவர்களின் பாசத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையை தேவையில்லாமல் சந்தேகிப்பதை தவிர்க்கவும். இல்லையெனில், உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 4:25 மணி வரை