தனுசு செல்லும் சூரியனால் அதிகம் சிரமப்படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
இந்நேரத்தில் சூரியன் தனது நட்பு கிரகமான குரு ஆளும் தனுசு ராசிக்குள் நுழைகிறார். சூரியன், தனுசு இரண்டுமே நெருப்புக்கு சொந்தமானவை. உமிழும் கிரகமான சூரியன், தனுசு என்ற ஒரு உமிழும் ராசிக்குள் நுழைவதால், இது தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற உதவி புரியும்.
நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் தான் சூரியன். இவர் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு டிசம்பர் 15 ஆம் திகதி இரவு 9:19 மணிக்கு இடம் பெயர்கிறார்.
இந்நேரத்தில் சூரியன் தனது நட்பு கிரகமான குரு ஆளும் தனுசு ராசிக்குள் நுழைகிறார். சூரியன், தனுசு இரண்டுமே நெருப்புக்கு சொந்தமானவை. உமிழும் கிரகமான சூரியன், தனுசு என்ற ஒரு உமிழும் ராசிக்குள் நுழைவதால், இது தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற உதவி புரியும்.
தனுசு ராசிக்கு சூரியன் செல்லும் போது பிறக்கும் தமிழ் மாதம் தான் மார்கழி. பொதுவாக நவகிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தனுசுக்கு செல்லும் சூரியனால், மார்கழி மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை கீழே காண்போம்.
மேஷம் - மேஷ ராசியின் 5 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியார் 9 ஆவது வீட்டிற்குள் நுழைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் தந்தை ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும். அதனால் அவரது உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது தவிர உங்களின் நற்பெயர் மற்றும் கௌரவத்தில் உயர்வு இருக்கும். உங்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைவீர்கள். நீங்கள் பணிபுரிபவராயின், உங்கள் வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் நிலையான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆனால் அவை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம் - ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இப்பெயர்ச்சியின் போது 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் புனிதமானதாக இருக்காது. இவ்வாறான நிலையில், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த பெயர்ச்சி உங்களின் செழிப்பு மற்றும் வருமான வீழ்ச்சியைக் குறிக்கிறது.மேலும் உங்கள் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும் மற்றும் வேலையில் ஏற்படும் தாமதம் உங்களை மனரீதியாக பாதிக்கும். சில சமயங்களில் உங்களின் மாமியார் வழியில் இருந்து சில சிக்கல்கள் எழக்கூடும். ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் ஆன்மீக மற்றும் மத நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். இந்த காலத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். எனவே, சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம் அல்லது இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம்.
மிதுனம் - மிதுன ராசியின் 3 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்காது, சற்று கலவையான முடிவுகளையே தரும். நீங்கள் வியாபாரம் செய்தால், லாபத்தைக் காணவும், வியாபாரத்தை விரிவடையச் செய்யவும், சற்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த பெயர்ச்சிய உங்கள் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இல்லை. உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிக்கும். இது உறவில் கசப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, பொறுமையாக இருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் உங்கள் உறவு சிதைந்துவிடும். உங்கள் துணையின் நடத்தை மாறும் மற்றும் அவர்கள் உங்களிடம் சற்று அகங்காரத்துடன் பேசுவார்கள். இதுதவிர, உங்கள் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
கடகம் - கடக ராசியின் இரண்டாவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது 6 ஆவது வீட்டிற்குள் நுழைகிறார். 6 ஆவது வீட்டில் சூரியனின் இருப்பு சாதகமானதாக இருக்கும். உங்கள் வேரலயில் நல்ல பலன்களைப் பெற ஆரம்பிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் சட்டம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள் மற்றும் அதிலிருந்து பயனடைவீர்கள். குடும்பத்தில் உள்ள ஒருவருடனான சச்சரவுகள் அதிகரிக்கக்கூடும், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை கவனித்துக் கொள்ளுங்கள், சீரான வாழ்க்கை முறையை பராமரிக்கவும். உங்களுக்கு காய்ச்சல் வரக்கூடும். முக்கியமாக வீணாக யாருடனும் எந்தவொரு வாக்குவாதத்திலும் ஈடுபட முயற்சிக்காதீர்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் மாற்றம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த ராசியின் அதிபதி சூரியன் ஆகும். அதாவது முதல் வீட்டை ஆளும் சூரியன், இந்த பெயர்ச்சியால் 5 ஆவது வீட்டிற்குள் செல்கிறார். இந்த பெயர்ச்சி உங்கள் மிகவும் சாதகமானதாக இருக்காது. சற்று கலவையான முடிவுகளையே பெறுவீர்கள். சூரியனின் இந்த இடமாற்றம் உங்கள் வருமான உயர்வைக் குறிக்கிறது மற்றும் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களுடன் இணைவதற்கு உங்களுக்கு உதவும். இந்த சூரிய பெயர்ச்சியால் குழந்தைகள் பாதிக்கப்படலாம். நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் சில சர்ச்சைகள் எழக்கூடும். சிறு பிரச்சனைகளுக்காக உங்கள் காதலியுடன் சண்டையிடாதீர்கள். அமைதியாக இருங்கள். சரியான நேரம் வரும் போது, அவர்கள் செய்த தவறைப் புரிந்து கொள்வார்கள். உங்கள் வாழ்க்கை துணை எந்தவொரு வேலையிலும் ஈடுபட்டிருந்தால், இந்த நேரத்தில் அவர்கள் நிதி ரீதியாக பயனடையலாம் மற்றும் இது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி - கன்னி ராசியின் 12 ஆவது வீட்டை ஆளும் சூரியன், இந்த பெயர்ச்சியின் போது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்காது. குடும்ப வாழ்க்கையில் பதற்றம் இருக்கும். குடும்பத்தில் வயதானவரின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். இதன் காரணமாக, நிறைய செலவிட வேண்டியிருக்கும். இது மனரீதியாக உங்களை பாதிக்கும். உங்கள் தாய் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்படுவார். உங்களை சிறந்தவராக முயற்சிக்கும் போது, மற்றவர்களை அவமதிக்காதீர்கள். இந்த காலத்தில் உங்கள் குடும்பத்தில் ஏதாவது புதிதாக ஏதாவது செல்ல முயற்சிப்பீர்கள். வெளிநாட்டில் உள்ளவர்கள், தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் உள்ள அதிகப்படியான பிரச்சனையின் காரணமாக, வேலையில் சிறப்பாக உங்களால் கவனம் செலுத்த முடியாது. இது உங்களை தவறு செய்ய ஆளாக்கும்.
துலாம் - துலாம் ராசியின் பதினொன்றாவது வீட்டின் அதிபதியான சூரியன், 3 ஆவது வீட்டில் நுழைகிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான செய்திகளைக் கெண்டு வரும் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும். பணியிடத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும் மற்றும் உங்கள் கடின உழைப்பு மிகவும் பாராட்டப்படும். அரசாங்கத்திடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் அரசாங்கத் துறையிலிருந்து பயனடைவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் சமூகத்தில் உங்களை நிலைநிறுத்த உதவும். உங்களின் தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளால் உங்கள் வருமான அளவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு முடிந்தவரை நீங்கள் உதவுவீர்கள். இது அவர்களுக்குள் உங்கள் மீதான பாசத்தையும் மரியாதையையும் அதிகரிக்கும்.
விருச்சிகம் - விருச்சிக ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் செல்வத்தைப் பெறக்கூடும். நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள் மற்றும் செல்வத்தை சேர்ப்பதில் வெற்றி காண்பீர்கள். உங்கள் குடும்பத்தில் உங்களின் நிலை உயரும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் உங்களின் ஆலோசனையையும் பெறுவார்கள். இந்த பெயர்ச்சியால் நீங்கள் சற்று முரட்டுத்தனமாக பேச ஆரம்பிக்கலாம். இது உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் புண்படுத்தும்படி இருக்கும். குடுப வாழ்க்கையில் நீங்கள் திருப்தியடையாமல் இருப்பீர்கள். இருப்பினும், பணியிடத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தனுசு - தனுசு ராசியின் 9 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் ராஜ யோகத்தைப் பெறப் போகிறீர்கள். அதிலும் உங்கள் ஜாதகத்தில் உள்ள தசைகள் சாதகமாக இருந்தால், சூரியனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய உதவும் மற்றும் சமூகத்தில் ஒரு புகழ்பெற்ற இடத்தை அடைய உதவும். உங்களின் புகழ் அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் ஈகோ அதிகரிக்கக்கூடும். இதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்களுடைய இந்த நடத்தை உங்கள் வாழ்க்கைத் துணையையும் தொந்தரவு செய்யலாம். இதன் விளைவாக, நீங்கள் திருமண வாழ்க்கையில் கசப்பை அனுபவிப்பீர்கள். வணிகத்தைப் பொறுத்தவரை, சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
மகரம் - மகர ராசியின் 8 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், பன்னிரண்டாவது வீட்டிற்கு நுழைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெறமாட்டார்கள். இந்த பெயர்ச்சி கலவையான முடிவுகளையேத் தரும். சூரியனின் இந்த மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். உங்கள் வருமானத்தில் சரிவு காணப்படலாம். இது உங்கள் நிதி நிலையை பெரிதும் பாதிக்கும். இருப்பினும், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இத்தகைய சூழ்நிலையிலும் முன்னேற உங்களுக்கு தைரியத்தை வழங்கும். எப்பேற்பட்ட சவால்களையும் எதிர்க்க பயப்படமாட்டீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். இந்த சூரிய பெயர்ச்சி சட்ட விஷயங்களில் நன்மை பயக்கும். உங்கள் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும். இது சற்று தொந்தரவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் நிதிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
கும்பம் - கும்ப ராசியின் 7 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன் பதினொன்றாவது வீட்டிற்கு செல்கிறார். இந்த சூரிய மாற்றம் சாதமாக இருக்கும். வணிகம் செய்பவர்கள், வணிகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட வழிவகுக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், நீங்கள் சமூக மற்றும் நிதி ரீதியாக செழிப்பீர்கள். இந்த சூரிய பெயர்ச்சியின் காரணமாக, உங்கள் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கலாம், உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களின் லட்சியங்கள் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையிலான தூரம் அதிகரிக்கும். திருமணமானவர்களாக இருந்தால், உங்கள் குழந்தைகளுக்கு சாதகமானதாக இக்காலம் இருக்கும். நீங்கள் அரசுத் துறையிலிருந்தால் நன்கு பயனடைவீர்கள். அதிலும் நீங்கள் ஒரு அரசாங்க அதிகாரி அல்லது பணியாளராக இருந்தால், நிபந்தனைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மீனம் - மீன ராசியின் 6 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது பத்தாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான முடிவுகளைத் தரும். சூரியனின் ஆசீர்வாதத்தால், தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உயர் பதவிக்கு உயர்த்தப்படுவீர்கள். உங்கள் பணிச்சுமை மற்றும் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இது உங்களை சக்திவாய்ந்ததாக மாற்றும். இந்த சூரிய பெயர்சிசி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சாதகமானதாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலை வலுவாகும். உங்கள் கடின உழைப்பும் முயற்சியும் வாழ்க்கையில் வளர முன்னேற உதவும். உங்கள் தந்தையின் உடல்நிலை பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவரை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பணியிடத்தில் நீங்கள் ஒரு புதிய கொள்கையை உருவாக்கலாம், இது சுற்றியுள்ள மக்களால் விரும்பப்படும் மற்றும் மிகவும் பாராட்டப்படும்.