இன்று இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 3ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்கவும், உங்களுக்கு பிடித்த வேலையைச் செய்வதற்கும் இன்று ஒரு நல்ல நாள். பணிச்சுமை குறைவாக இருக்கும். இன்று சில்லறை வர்த்தகர்கள் நன்றாக பயனடையலாம். பணத்தைப் பற்றி பேசுகையில், இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, சிந்தனையுடன் செலவிட அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களைக் கவர அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையிடம் சில மாற்றங்களைக் காணலாம். அவர்களுடன் பொறுமையாக பேசி, அவர்களின் மனதை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மாலை 3:45 மணி வரை
ரிஷபம் - இன்றைய தினம் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. இன்று நண்பர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அப்போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்கவும். வணிகர்கள் இன்று சிறு பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். வாழ்க்கைத் துணையுடன் இன்று கருத்து வேறுபாடு ஏற்படலாம். மாலைக்குள் அனைத்தும் சரியாகிவிடும். வேலைப்பளு காரணமாக அன்புக்குரியவருடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம். உடல்நலம் பற்றி பேசினால், தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை
மிதுனம் - இன்று பணத்தின் அடிப்படையில் நீங்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு, இன்று ஒரு கலவையான நாளாக இருக்கும். இன்று உங்கள் செயல்திறனில் பல தடைகள் இருக்கலாம். நிறைய மன அழுத்தத்தையும் உணரலாம். அலுவலகத்தில் உங்களுக்கு அதிகரித்த பொறுப்புகள் வழங்கப்படலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். பெற்றோருடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து ஒரு அழகான பரிசைப் பெறலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மன அழுத்தம் காரணமாக நன்றாக உணர மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
கடகம் - உடல்நலம் சார்ந்த விஷயங்களில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். சிறு அலட்சியத்தால் நிறைய சிக்கல்களில் சிக்கக்கூடும். வீட்டிலுள்ள அனைவருடனும் சமநிலையை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். பெரியவர்களை மதித்து, இளையவர்களை அன்போடு நடத்துங்கள். வாழ்க்கைத் துணை உங்களிடம் சில காலமாக கோபமாக இருந்தால், இன்று அனைத்தும் மறைந்துவிடும். அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவது சாத்தியமாகும். பணம் நல்ல நிலையில் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் போட்டி அதிகரிக்கக்கூடும். கடுமையாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்கள் லாபம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
சிம்மம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உத்தியோகஸ்தர்கள், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும், இன்று மூத்த அதிகாரிகள் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். வர்த்தகர்கள், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை மனதில் கொண்டு புதிய பங்குகள் வாங்குவது குறித்து திட்டமிட வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இன்று நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதலிப்பவர்கள், தங்களது காதலை பற்றி குடும்பத்தினரிடம் பேசுவதற்கு சாதகமான நாள். கோபத்தையும், மன அழுத்தத்தையும் குறைத்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை
கன்னி - இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் நிறைந்திருப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் சிறப்பாக முடிக்கப்படும். நீங்கள் முதலாளியின் உதவியைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்கள் இன்று கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான பணிபுரிவோர், முடிவுகளை கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில், நிலைமை சாதகமாக இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து நிதி நன்மை சாத்தியமாகும். காதலிப்பவர்களுக்கு இன்றைய தினம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை
துலாம் - இன்று வணிகர்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். சிறு வணிகர்கள் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். நீண்ட கால பிரச்சனைகளை தந்தையின் உதவியுடன் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணையிடம் பொய் கூறுவதை தவிர்த்தால் நல்லது. நிதி சார்ந்து விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பதால், விரைவில் நிதி சிக்கல்களிலிருந்து விடுபடலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் அறிவுரைகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
விருச்சிகம் - இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறு கவனக்குறைவு கூட உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சிக்கவும். காதல் விஷயத்தில், இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது. சிறு விஷயத்திற்காக பெரிய விவாதம் ஏற்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் இன்று உங்களுக்கு சில கடினமான பணிகளை ஒப்படைக்க முடியும். மேலும் உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். மருந்து வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். சில விருந்தினர்கள் மாலையில் திடீரென வீட்டிற்கு வரக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
தனுசு - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்களுக்கான நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் கனவை நிறைவேற்றுவதற்காக விடாமுயற்சியுடன் படிக்க முயற்சி செய்யுங்கள். இன்று, பேசும்போது, உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு சிறந்த நாளாக இருக்கப்போகிறது. அன்புக்குரியவர்கள் உங்களுக்காக ஒரு ஆச்சரியமான திட்டத்தை உருவாக்கலாம். அலுவலகத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். சக ஊழியர்களுடனான ஒருங்கிணைப்பும் நன்றாக இருக்கும். வணிகர்கள் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணி வரை
மகரம் - பொருளாதார நிலைமையில் பெரிய முன்னேற்றம் சாத்தியமாகும். திடீர் செல்வத்தை அடைய முடியும். உங்கள் வாழ்க்கைத் துணைடன் காதல் அதிகரிக்கும். அவர்களுடன் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலை மறையும். மேலும், குழந்தைகளின் கல்விக்காக இன்று நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. காதல் திருமணம் செய்ய விரும்புவோர், வீட்டில் பேசுவதற்கு இன்று உகந்த நாள் இல்லை. உடல்நலம் பற்றி பேசினால், ஒற்றைத் தலைவரி பிரச்சனை இருந்தால், இன்று அதிகம் கவனித்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை
கும்பம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் பார்த்து கவனமாக செயல்படவும். மகாதேவரை வணங்குவதன் மூலம் இன்றைய நாளைத் தொடங்குங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். மூத்த அதிகாரிகள் உங்கள் பணியில் திருப்தி அடைவார்கள். இன்று அவர்கள் சில முக்கியமான பொறுப்பையும் உங்களிடம் ஒப்படைக்கக்கூடும். பங்குச் சந்தையில் பணிபுரிவோர் கலவையான முடிவுகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று எந்தவொரு சுப நிகழ்ச்சியையும் வீட்டில் ஏற்பாடு செய்யலாம். வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும், மேலும் அவருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 8:45 மணி வரை
மீனம் - வேலை முன்னணியில் உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டால், அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் வேலை மாற்றும் எண்ணத்தைத் தவிர்த்திடுங்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். பெற்றோருடன் போதுமான நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் பெரிய விவாதம் தோன்றலாம். கோபத்தையும். கடும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், வேலைக்கும் ஓய்வுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை