இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயங்களில் இந்த வாரம் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!

அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள  தொடர்ந்து படியுங்கள். 

இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயங்களில் இந்த வாரம் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது!

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது டிசம்பர் 13 முதல் டிசம்பர் 19 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், உங்கள் உடல்நலம் பாதிக்கக்கூடும். வீண் செலவுகள குறைத்துக் கொள்ளவும். நண்பர்களுடன் பேசும் போது மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். கோபத்தை குறைத்தால் வீண் சண்டைகளை தவிர்த்திடலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த வாரம் வேலையில் பரபரப்பாக காணப்படுவீர்கள். ஓய்வெடுப்பதற்கான நேரம் கிடைக்காமல் போகலாம். வார இறுதியில், குடும்பத்தாரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

ரிஷபம் - செய்யும் வேலையில் இந்த வாரம் நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களது கனவு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் இந்த வாரத்தில் எடுக்கும் சில முக்கிய முடிவுகளால், அதற்கான பலனை நிச்சயமாக பெறுவார்கள். பண வரவு திருப்தியளிக்கும். இருந்தாலும், இந்த வாரம் கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள். வாழ்க்கை துணையுடனான நேரம் செலவிடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அன்புக்குரியவர்களோடு போதுமான நேரம் செலவிட முடியும். குழந்தைகள் சார்ந்த கவலைகள் நீங்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் சிறு கவனக்குறைவு கூட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மிதுனம் - இந்த வாரம் சில தேவையற்ற செலவுகள் வரக்கூடும். நிதி சார்ந்த முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பட்ஜெட்டை முன்கூட்டியே தயாரிப்பது நல்லது. அலுவலகத்தில் கலவையான சூழல் நிலவும். அலுவலகத்தில், உயர் அதிகாரிகளை பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொள்ளாதீர்கள். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும். அரசு பணியில் உள்ளவர்கள், இந்த வாரம் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பெரிய லாப நோக்கத்தோடு தீட்டப்படும் திட்டங்களில் சிறு மாற்றத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நிலையைப் பொருத்தவரை, இடுப்பு அல்லது முதுகு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கடகம் - குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமிது. சிறு கருத்து வேறுபாடு கூட உறவை பாதிக்கக்கூடும். நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. வீட்டின் இளைய உறுப்பினர்களுடன் மென்மையான அணுகுமுறையை கையாளுங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்கள், முழு கவனத்தையும் வேலையில் செலுத்துவது நல்லது. உணவுப் பொருட்களை வர்த்தகம் செய்பவர்கள் இந்த வாரம் நல்ல லாபம் ஈட்ட முடியும். வழக்கத்தை விட இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். உடல்நலம் பற்றி பேசினால், கல்லீரஸ் தொடர்பான பிரச்சனை உண்டாகலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம் - இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மன சிக்கல் அதிகரிக்கக்கூடும். எனவே, மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சியுங்கள். கோபம் மற்றும எரிச்சலை ஒரு போதும் கையில் எடுக்காதீர்கள். பின்னர், அதனால் வருத்தப்படும் படி இருக்கும். அலுவலகத்தில் வேலைகளை வேகமாக முடிக்க முயற்சியுங்கள். கால தாமதத்தால் சிக்கல்கள் உருவாகலாம். முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். வர்த்தகர்கள் பொருளாதார முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். உடல்நலம் பற்றிப் பேசினால், மன கவலை அதிகரிப்பதால் ஆரோக்கியம் பலவீனமாகக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி - இந்த வாரம் குடும்பத்தில் சிறு சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கோபத்தை சற்று விலக்கியே வையுங்கள். தந்தையில் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழலில், அவரை மன அழுத்தத்தில் இருந்து விலக்கி வைக்க முயற்சியுங்கள். வருமானத்தை அதிகரிக்க தொடர்ந்து பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தலாம். வாழ்க்கை துணையுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

துலாம் - தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வாழ்க்கை துணையுடனான உறவு வலுபெறும். இத்தனை நாளாக இருந்து வந்த பிரச்சனையை தீர்க்க இது சிறந்த காலம். இந்த வாரம் உங்களுக்காக சிறிது செலவு செய்ய நேரிடலாம். வாரத்தின் நடுப்பகுதியில், விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அவசர முடிவுகளை கோபத்தில் எடுப்பதை தவிர்க்கவும். சிறு வேலையையும் மிக கவனமாக செய்ய முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை மேம்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்சிகம் - இந்த வாரம் தனிப்பட்ட அல்லது தொழில்முறை வாழ்க்கையில் சில அவசர முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அலுவலக வேலை தொடர்பாக திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிகப்படியான பணிசுமையும் இருக்கக்கூடும். வணிகர்கள் சட்ட விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையுடனான உறவு வலுப்பெறும். வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மனைவியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தந்தையின் உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், இந்த வாரம் நல்ல முன்னேற்றம் காணப்படும். இந்த வாரம் விலையுயர்ந்த பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. தேவையில்லாத செலவுகள் தலை தூக்கலாம். வார இறுதியில் சில நற்செய்திகள் மூலம் மகிழ்ச்சியடையக்கூடும். உடல்நலத்தை பொறுத்தவரை, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் நல்லதாகவே இருக்கப்போகிறது. முடிக்கப்படாத சில பணிகளை முடிப்பதன் மூலம் நல்ல பலனை அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு, உயர் பதவி வடிவிலோ அல்லது அரசு வேலையோ கிடைப்பதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது. சிறு வணிகர்கள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. உங்கள் பணி பங்கு சந்தை தொடர்பானது என்றால், பெரிய லாபத்தை பெறலாம். குடும்பத்தாரோடு போதுமான நேரம் செலவிட முடியும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுப்பெறும். மூத்த சகோதரியின் உதவியுடன், சில பிரச்சனைகளில் தீர்வு பெற முடியும். திருமணமாகாதவர்களுக்கு காதல் மலர வாய்ப்புள்ளது. பண வரவு திருப்தி அளிக்கும். ஆரோக்கியம் பொறுத்தவரை, எந்த கவலையும் பட தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 43

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மகரம் - இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக, உண்ணும் உணவில் கவனம் தேவை. வெளியே சாப்பிடுவது, பய உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்திடவும். வேலையை பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். வணிர்கள் எதிர்பார்த்த லாபத்தை காண முடியும். நிதி சிக்கல்களால் தடைப்பட்ட புதிய தொழில் திட்டங்கள், நல்ல முறையில் மீண்டும் தொடங்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு சிறந்த வாரமிது. முன்னேற்றத்தில் இருக்கக்கூடிய தடைகளை, தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் சமாளிக்க முடியும். வார இறுதியில், குடும்ப பிரச்சனைகளால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். எனவே, எந்தவொரு பிரச்சனையையும் புத்திசாலித்தனமாக கையாளுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம் - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சற்று மெதுவாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பீர்கள். மேலும், உங்கள் வேலையில் நீங்கள் சரியாக கவனம் செலுத்த முடியாது. இருப்பினும், விரைவில் முழு உற்சாகத்துடனு திரும்புவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அவர்களின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள். இந்த வாரம் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உங்களது வணிகம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையது என்றால், இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவில் விரிசல் அதிகரிப்பதால் மிகவும் மனச்சோர்வடைவீர்கள். அன்புக்குரியவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். நிதி சார்ந்த முடிவுகளை யோசித்து எடுத்தால், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உடல்நலம் பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் நீரிழப்பு பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

மீனம் - உங்கள் நிதி பிரச்சினை இந்த வாரம் நல்லமுறையில் தீர்க்கப்படும். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். இந்த வாரம் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும். வேலையைப் பற்றி பேசினால், நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்லாது, சொந்தமாக சிறு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், இந்த காலகட்டத்தில் நல்ல சலுகைகளை பெறலாம். இருப்பினும், உங்கள் முடிவை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இந்த நேரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0