இறந்த கணவருக்காக கோவில் கட்டி தினமும் வழிபடும் மனைவி... காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக கணவரை தெய்வமாக வழிபட வேண்டுமென்று கூறுவார்கள், ஆனால் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இறந்த கணவருக்காக கோவிலே கட்டி அவரை தினமும் வழிபட்டு வருகிறார். அவரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இறந்த கணவருக்காக கோவில் கட்டி தினமும் வழிபடும் மனைவி... காரணம் என்ன தெரியுமா?

காதல், திருமணம் போன்றவை மிகவும் சாதாரணாமான ஒன்றாக மாறிவரும் இந்த காலசூழ்நிலையில் அவ்வப்போது உண்மையான காதல் இருப்பதை சில சம்பவங்கள் நம் சமூகத்திற்கு நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பொதுவாக கணவரை தெய்வமாக வழிபட வேண்டுமென்று கூறுவார்கள், ஆனால் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் தனது இறந்த கணவருக்காக கோவிலே கட்டி அவரை தினமும் வழிபட்டு வருகிறார். அவரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில்பத்மாவதி என்னும் பெண் 'உண்மையான காதல் ஒருபோதும் இறப்பதில்லை' என்பதை நிரூபிக்கும் வண்ணம், இறந்த தன் கணவருக்காக ஒரு கோவிலைக் கட்டியுள்ளார். 

இந்த கோவில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது மற்றும் அவரது கணவர் அங்கிரெட்டியின் மார்பளவு சிலையும் அந்த கோவிலில் நிருவப்பட்டுள்ளது. அவர் தினமும் சிலைக்கு முன் பிரார்த்தனை செய்து பூஜை செய்கிறார்.

மிகவும் பழமைவாத குடும்பத்தில் பிறந்தவர் பத்மாவதி. அவரது கணவர் அங்கிரெட்டி நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு மோசமான சாலை விபத்தில் இறந்த போது பத்மாவதி நொறுங்கி போய்விட்டார். 

அங்கிரெட்டி இறந்து சில நாட்களுக்குப் பிறகு அவரது கனவில் தோன்றி அவருக்காக ஒரு கோயிலைக் கட்டச் சொன்னதாக பத்மாவதி கூறுகிறார். இதைப்பற்றி பத்மாவதி கூறுகையில், " தன் தாய் தன் தந்தையை வணங்குவதை பார்த்து தான் வளர்ந்ததாகவும், திருமணத்திற்கு பிறகு தன் தாயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுதாகவும் கூறினார். "

தனது கணவர் கனவில் வந்து கூறியவுடன் அதை செயல்படுத்துவதில் பத்மாவதி இறங்கினார். தன் கணவனின் நண்பர் திருப்பதி ரெட்டி மற்றும் அவரது மகன் சிவசங்கர் ரெட்டி ஆகியோரின் உதவியைப் பெற்று, தனது கணவரின் வடிவத்தில் ஒரு பளிங்கு சிலையை நிறுவினார்.

கோவில் நிறுவியதிலிருந்து, தினமும் அங்கு பூஜை செய்து குடும்ப நலனுக்காக பத்மாவதி பிரார்த்தனை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல், வார இறுதி நாட்களில் பத்மாவதி சிறப்பு பிரார்த்தனை செய்து தனது கணவரின் பெயரில் பிரசாதத்தையும் விநியோக்கிறார். தன் கணவர் உயிருடன் இருந்தபோது, அவரை கடவுளாக பார்த்ததாக அவர் கூறினார்.

நித்திய அன்பு மற்றும் பக்தியின் இந்த மகத்தான செயல் நெட்டிசன்களின் இதயங்களை நெகிழச் செய்து அவர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. அவரது மகன் சிவசங்கர் ரெட்டி, ஒருவருக்கொருவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்த தம்பதிகளுக்குப் பிறந்ததற்காக அவர் தன்னை பாக்கியசாலியாகக் கருதினார் மற்றும் அவரது பெற்றோரை ஒரு சிறந்த ஜோடி என்று கூறினார்.

இதேபோன்ற சம்பவம் முன்பு தெலுங்கானாவின் விகராபாத் மாவட்டத்தின் பஷிராபாத் மண்டலத்தின் நாவல்கா கிராமத்தில் நடந்தது. குழந்தை இல்லாத மோகுலப்பா, தனது இளைய சகோதரரின் பேரனான ஈஸ்வரை தத்தெடுத்து, அந்தச் சிறுவனை தனது சொந்த மகனாகப் பார்த்துக் கொண்டார். 

2013 இல் மொகுலப்பா இறந்த பிறகு, ஈஸ்வரும் அவரின் தாத்தாவின் சிலையை செய்து அவருடைய பெயரில் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். அவர் கோவிலுக்கு ரூ .24 லட்சம் செலவு செய்து, அவரது பெயரில் சமூக சேவைகளைத் தொடங்கினார்.

மகாராஷ்டிராவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், மூன்று மகன்கள் தங்கள் மறைந்த பெற்றோருக்காக ஒரு கோவிலைக் கட்டி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். தசரதுடு, தன்ராஜ் மற்றும் தரணேஷ் ஆகியோர் தங்கள் பெற்றோர் விஸ்வநாத் மற்றும் லட்சுமிபாய் மீது தங்கள் அன்பைக் காட்டுகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0