வீண் விவாதங்களால் இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது!
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். திங்கட்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இன்றைய தினம் உங்களது முடிவுகளை இதயத்திற்கு பதிலாக, மனதிலிருந்து எடுத்தால் நல்லது. அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதே உங்களது இலக்காக இருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கலில் சிக்கக்கூடும். வணிகர்கள், சிறந்த பொருளாதார நலன்களை பெற வேண்டுமெனில், உங்களது திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சிறு வணிகர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். பிரச்சனைகளை கோபத்தை தவிர்த்து, அமைதியாக சரிசெய்ய முயலுங்கள். பண நிலைமை நன்றாக இருக்கும். செலவுகளை குறைக்க முடியும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
ரிஷபம் - வணிகர்கள் இன்று சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். நீங்கள் பெரிய தொழிலதிபராக இருந்தால், சம்பளம் குறித்து ஊழியர்களுடன் இன்று சில கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இன்று, இடமாற்றம் குறித்த தகவல்களை அலுவலகத்தில் இருந்து பெறலாம். பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். சேமிப்புக்கு அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்களது உறவு வலுவாக இருக்கும். அன்புக்குரியவரிடமிருந்து ஒரு நல்ல பரிசையும் பெறலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 முதல் 9:00 வரை
மிதுனம் - பணத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். கணக்கு வழக்குதியில் முழு எச்சரிக்கையுடன் இருங்கள். இன்றைய தினம் கடன் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் உருவாகலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. இன்று வேலை முன்னணியில் கலவையான முடிவுகள் இருக்கும். வேலை செய்யும் நபர்கள் நேரத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் பற்றிப் பேசினால், குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்களை தவிர்த்திடுங்கள். இல்லையெனில், அவற்றால் உடல்நலம் பாதிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் 10:00 மணி வரை
கடகம் - வேலை முன்னணியில், நீங்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். நீங்கள் ஆன்லைனில் வியாபாரம் செய்தால் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் இன்று பதவி உயர்வு கிடைக்கப் பெறலாம். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்கள் படிப்பில் ஒரு பெரிய தடையை சந்திக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தற்காலிகமானது தான். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். இல்லையெனில் வரும் நாட்களில் பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு இணக்கமாக இருக்கும். இன்று அன்புக்குரியவருடன் மிகவும் மறக்கமுடியாத நேரத்தை பெறுவீர்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை
சிம்மம் - நீண்ட காலமாக நடந்து வழக்கில் இன்று நீங்கள் வெற்றி பெறலாம். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான திடீர் வாய்ப்புகள் வந்து சேரும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், பெற்றோரின் உடல்நிலை குறித்த கவலை அதிகரிக்கக்கூடும. குடும்பப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முடியும். அலுவலகத்தில் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும். வேலையில் முழு கவனத்தை செலுத்துங்கள். மன அமைதி தேவைப்படும் நாள். எனவே, தியானம் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:00 மணி வரை
கன்னி - இன்று வேலை முன்னணியில் சாதகமான நாளாக இருக்கும். அலுவலக வேலைகளை முழு கவனத்துடன் செய்து முடிக்க முடியும். அதனால், உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிடலாம். சில முக்கிய பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வணிகர்களுக்கு, வணிகத்தை மேம்படுத்துவதற்கான வலுவான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் எதிரிகளுக்கு கடும் போட்டியைக் கொடுப்பீர்கள். வருமானத்தை அதிகரிப்பதற்கான சில முயற்சிகள் தோல்வியில் முடியலாம். அதனால், ஏமாற்றமடைய வேண்டியதில்லை. நேரம் வரும் போது, கடின உழைப்பிற்கான சரியான பலனைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், மகிழ்ச்சியம், அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12 மணி வரை
துலாம் - இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால், கவனமும், நிதானமும் தேவை. பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. முதலீடுகளை தவிர்த்திடவும். இன்று மனசோர்வு அதிகரிக்கக்கூடும். மேலும், எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், உங்களது முழு கவனமும் முக்கியமான பணிகளின் மீது மட்டுமே இருக்க வேண்டும். தேவையில்லாத யோசனையல் மன அமைதியைக் குலைக்க வேண்டாம். மேலும், உங்களது பொன்னான நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை
விருச்சிகம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நள். உங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிடாதீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று செலவுகள் குறைவாக இருக்கும். மேலும், நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். வேலையைப் பற்றி பேசினால், ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். எந்த முடிவையு அவசரமாக எடுக்காமல் இருப்பது நல்லது. இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:55 மணி வரை
தனுசு - எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காவிட்டாலும், உங்களது எண்ணங்களை நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். முழு ஆற்றலுடனும், உற்சாகத்துடன் முன்னேறினால், விரைவில் வெற்றி பெறலாம். அலுவலகத்தில் சில கடினமாக வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உயர் அதிகாரிகளின் உதவியுடன், அனைத்து வேலைகளையம் சரியான நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். பங்குச் சந்தை தொடர்பான வணிகம் மேற்கொள்பவர்கள், இன்று சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். உடல்நிலை பற்றி பேசினால், ஒவ்வாமை அல்லது நோய்தொற்று ஏற்படலாம். கவனக்குறைவை தவிர்த்திடுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 முதல் மதியம் 12:00 மணி வரை
மகரம் - வேலை முன்னணியில், இன்று கலவையான முடிவுகளைப் பெறலாம். அலுவலகத்தில் எந்தவொரு சிறு தவறும் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். இன்று உயர் அதிகாரிகளின் பார்வை உங்கள் மீது இருக்கும். அவசரமாக முடிவுகள் எடுப்பதை இன்றைய தினம் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். பெற்றோரின் ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் திருமணத்தை பற்றி வீட்டில் பேசப்படலாம். இன்று பொருளாதார முன்னணியில் இருந்து வந்த பெரிய பிரச்சனைகள் அகலும். உங்கள் உடல்நலம் பற்றி பேசும்போது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 முதல் 9:50 வரை
கும்பம் - உங்கள் துறையில் நிலைமை சாதகமாக இருக்கும். உங்களது பேச்சு திறமையால் பெரிய நன்மையைப் பெறப் போகிறீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருங்கள். மாலையில் சில நல்ல செய்திகளால் மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலக வேலையில் உற்சாகத்துடன், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். கடின உழைப்பிற்கான பலன் உங்களை தேடி வரும். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில், சிறு விஷயமும், பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 10:00 மணி வரை
மீனம் - பொருளாதார முன்னணியில், இன்றைய தினம் நல்லதாக இருக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இதனால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியும். வேலை முன்னணியில், நீங்கள் இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகள் பெரிதும் ஈர்க்கப்படுவார்கள். இதனால், ஒரு பெரிய நன்மையைப் பெற வாய்ப்புள்ளது. இன்று வருமானத்தை அதிகரிக்க சில நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். உடல்நலப் பிரச்சனைகளால் சில சிரமங்களை சந்திக்கக்கூடும். மிகவும் உணர்ச்சிவசப்படுவது உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை






