இந்த 5 ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் பண்ண சுத்தமாக வராதாம்... காதலிச்சா ரொம்ப போரடிக்குமாம்...!
காதல் உறவை மேலும் அழகாக்கவும், நெருக்கமாகவும் மாற்ற ரொமான்ஸ் என்பது மிகவும் அவசியமானது. ரொமான்டிக்காக இருப்பது என்பது ஒருவரிடம் இருக்கும் கூடுதல் வசீகரமாகும்.
அன்பு என்பது யாரின் மீது வேண்டுமென்றாலும் வைக்கக்கூடிய ஒன்றாகும். ஆனால் ரொமான்ஸ் என்பது காதல் உறவுகளில் மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
காதல் உறவை மேலும் அழகாக்கவும், நெருக்கமாகவும் மாற்ற ரொமான்ஸ் என்பது மிகவும் அவசியமானது. ரொமான்டிக்காக இருப்பது என்பது ஒருவரிடம் இருக்கும் கூடுதல் வசீகரமாகும்.
நெருக்கமான காதல் உறவிற்கு ரொமான்ஸ் அவசியமான ஒன்றுதான் ஆனால் அனைவராலும் ரொமான்டிக் மன்னராக இருக்க முடியாது. சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு ரொமான்ஸ் இயல்பாகவே வரும், ஆனால் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னதான் முயற்சித்தாலும் ரொமான்ஸ் வராது.
இதனால் இவர்களுடனான காதலில் மற்றவர்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்படும். இதனால் காதல் முறிவு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிகளுக்கு ரொமான்ஸ் சுத்தமாக வராது என்று பார்க்கலாம்.
கும்பம் - கும்ப ராசிக்கும், ரொமன்ஸ்க்கும் ஆரோக்கியமான பிணைப்பு இருப்பதில்லை. காதலில் விழும் போது மிகவும் மெதுவாக இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் ரொமான்டிக்காக மாற நீண்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் முதலில் நண்பர்களாக இருக்க வேண்டும், பின்னர் அவர்களுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும். சுதந்திரமான ஆன்மாவாக இருக்க விரும்பும் இவர்கள் காதல் விவகாரங்களில் மிகவும் பழமை வாய்ந்த எண்ணத்துடன் இருப்பார்கள் மேலும் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு யாரும் தேவையில்லை என்பது இதன் அர்த்தமல்ல. தங்களுக்கு யாரும் தேவையில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதே உண்மை. காதலில் முழு அர்ப்பணிப்பு ஏற்பட்டவுடன் இவர்களின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு - தனுசு ராசிக்காரர்கள் சாகசக்காரர்களாக அறியப்படுகிறார்கள். அனைத்து சாகசங்களையும் தனியாக அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். மிகவும் அரிதாகவே இவர்கள் காதல் உறவை நாடுவார்கள், ஆனால் அவ்வாறு செய்யும்போது இவர்கள் முழுமனதுடன் நேர்மையாக செய்வார்கள். இவர்களிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கும், அதற்காக மற்றவர்கள் இவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவார்கள், ஆனால் காதல் என்று வரும்போது மிகவும் அரிதாகவே இவர்கள் இனிமையானத் தருணங்களை உருவாக்குவார்கள். அதற்கு மிகவும் பொறுமை தேவை, எனவே சிலரால் மட்டுமே இவர்களுடன் மகிழ்ச்சியான உறவில் இருக்க முடியும்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்க காதலர்களாக இருப்பார்கள் ஆனால் மிகவும் பழமைவாதிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையின் மீது அன்பு செலுத்துவதை விட ஆதிக்கம் செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளனர், இது பல சமயங்களில் காதலில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் மறுபுறம் இவர்கள் காதலில் அதிக சிற்றின்பத்தை எதிர்பார்ப்பார்கள். இது சிலசமயங்களில் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், பல சமயங்களில் அவர்களின் துணைக்கு தொந்தரவாகவே இருக்கும். மொத்தத்தில் இவர்களை காதலிப்பது சில சமயங்களில் மட்டும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
மகரம் - மகர ராசிக்காரர்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அது மட்டுமின்றி அதிக கூச்சசுபாவம் உடையவர்கள். அவர்களின் இந்த கூச்சம் அவர்களின் காதல் இயல்பை முழுமையாக மறைக்கிறது.இவர்களின் கூச்ச சுபாவத்தை நீங்கள் போக்கிவிட்டால் உணர்ச்சிவசப்படக்கூடிய காதலரை பார்க்கலாம். அவர்கள் இயல்பாகவே அதிகாரம் பெற்றவர்கள் மற்றும் கடிதங்கள் எழுதுவது அல்லது உங்களுக்கு ஒரு பாடலைப் பாடுவது போன்ற பழைய காதல் வடிவங்களை நம்பியிருக்கிறார்கள். ஒரு காதலனாக, மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமுள்ளவர்களாகவும், உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் ரொமான்டிக்கான காதலர்களாக இருக்க மாட்டார்கள்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் வேடிக்கையானவர்களாக இருந்தாலும், புதிய நண்பர்களை உருவாக்குபவராக இருந்தாலும் காதலைப் பொறுத்தவரை இவர்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்கள் காதலில் விழ பயப்படுவார்கள். காதலில் விழுந்த பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறும் என்ற அச்சத்திலேயே இவர்கள் காதலிப்பார்கள், அதிகப்படியான சிந்தனை அவர்களின் எண்ணங்களைக் குழப்புகிறது. இதனால் இவர்களுக்கு ரொமான்ஸ் செய்யும் எண்ணம் தோன்றுவது மிகவும் அரிதானது.