இந்த வாரம் நீங்க பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்...
அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது அக்டோபர் 10, 2021 முதல் அக்டோபர் 16, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இந்த வாரம் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக நீங்கள் உங்கள் நடத்தையை கவனிக்க வேண்டும். மற்றவர்களிடம் தவறாக நடந்துகொள்வதைத் தவிர்க்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், வணிகர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை காரணமாக, நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் செயல்திறன் குறையலாம். உங்கள் வேலையில் நீங்கள் முழு கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான சில நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
ரிஷபம் - இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்புபவராக இருந்தால், இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். விரைவில் உங்கள் திருமணம் கைக்கூடும். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்த நேரத்தில், ஏதேனும் பெரிய செலவு காரணமாக, உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக ஆகலாம். நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் இந்த காலத்தில் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கடின உழைப்பின் பலனை விரைவில் பதவி உயர்வு வடிவில் பெறலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தால், இந்த காலத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். குறிப்பாக உணவு பழக்கத்தில் கவனக்குறைவைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
மிதுனம் - உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், ஒரு பெரிய திட்டத்தில் வேலை செய்ய உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். நீங்கள் முன்னேற இது ஒரு பொன்னான வாய்ப்பு. எனவே, உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். வியாபாரிகள் வாரத்தின் தொடக்கத்தில் சில பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும், விரைவில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். நிதி அடிப்படையில், இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். வார இறுதியில் பணம் தொடர்பான சில பெரிய வேலைகளையும் செய்யலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குறிப்பாக தந்தையுடன் உறவு மேம்படும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கடகம் - இந்த காலகட்டத்தில் விலையுயர்ந்த பொருட்களை கவனமாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவை திருடு அல்லது தொலைந்து போகும் அபாயம் உள்ளது. வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு கடினமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் மிகவும் வருத்தப்படலாம். நிதி பார்வையில், இந்த வாரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை வைத்திருங்கள். நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உயர் அதிகாரிகளின் அழுத்தம் உத்தியோகஸ்தர்களுக்கு அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வேலையை அமைதியான மனதுடன் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். நேர்மறையாக இருப்பதுனட் கடினமாக உழைத்தால் விரைவில் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்யாவிட்டால் நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், சில பருவகால நோய்கள் இந்த காலகட்டத்தில் உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
சிம்மம் - மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பும் உங்களது பழக்கத்தால் நீங்கள் சில பிரச்சனைகளில் சிக்கக்கூடும். நீங்கள் எதைச் செய்தாலும் அதை சிந்தனையுடன் செய்வது நல்லது. வேலையைப் பற்றி பேசினால், இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு சற்றே கடினமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வேலையில் உயர் அதிகாரிகள் அதிருப்தி அடைவார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனநிலையை இழக்காமல் சமநிலையுடன் நடந்து கொள்ளுங்கள். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். துன்பத்தில், உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இதன் போது,தடைப்பட்ட பணம் கிடைப்பது உங்களுக்கு பெரிய நிவாரணத்தைக் கொடுக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு வயிற்று தொற்று இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
கன்னி - இந்த காலகட்டத்தில் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் புரிதலைக் காட்டி, பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்கவும். அதிகரித்து வரும் குடும்ப பிரச்சனை காரணமாக, தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். நீங்கள் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை கலவையான முடிவுகளை கொடுக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பிரச்சனை இருக்காது. இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்குவதை அல்லது கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை விஷயத்தில், இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்கள் எல்லாப் பொறுப்புகளையும் நன்றாக நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் விரைவில் உங்கள் கடின உழைப்பால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் உங்களுக்கு உடற்சோர்வு சற்று அதிகரிக்கலாம். வேலையுடன், ஓய்விலும் சற்று கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நாள்: புதன்
துலாம் - இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அன்புக்குரியவர்களுடன், குறிப்பாக குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவரின் உணர்வுகளை நீங்கள் மதிக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு பண விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த பண வரவைப் பெறலாம். உங்கள் வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் அதிகம் பேசுவதைத் தவிர்த்து, உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில், உங்கள் வேலை எதுவும் முடிக்கப்படாமல் இருந்தால், நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்தப் பயணம் வேலை தொடர்பானதாக இருக்கலாம். உங்கள் உடல்நலம் பற்றி பேசும்போது, அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் உடல்நலத்தில் பெரிய சரிவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
விருச்சிகம் - நீங்கள் மாணவராக இருந்தால் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். டிவி மற்றும் மொபைலில் இருந்து சிறிது விலகியே இருங்கள். அத்துடன் உங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். நீங்கள் உயர்கல்விக்கு ஏதேனும் முயற்சி செய்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏமாற்றமடையலாம். இருப்பினும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய செலவைச் செய்யப் போகிறீர்கள் என்றால், அதைத் தவிர்க்கவும். நீங்கள் ஏதேனும் பழைய சொத்தை விற்க முயற்சித்தால், அவசரம் வேண்டாம். வேலையைப் பற்றி பேசுகையில், வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பும் வேலையைப் பெறலாம். வணிகர்கள் பெரும் லாபங்களைப் பெறலாம். நீங்கள் உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இந்த வாரம் அதற்கு சாதகமானது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை
தனுசு - இந்த வாரம் உங்களுக்கு மிக நல்ல பலன்களைத் தரும். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினால், நீண்ட காலமாக சிக்கிக்கொண்ட வேலை, இந்த காலகட்டத்தில் முடிவடைவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இது தவிர, சம்பளம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் பிரச்சனையும் தீர்க்கப்படும். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை முன்னேற்ற நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும், நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், அதை மிகவும் கவனமாக எடுக்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்வில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். அன்புக்குரியவரின் மகிழ்ச்சியையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் வார இறுதியில் கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இருப்பினும்,நீங்கள் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் 14
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மகரம் - நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இந்த வாரம் உங்களுக்கு சில நல்ல வாய்ப்புகளைத் தரலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில நல்ல சலுகைகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் எந்தவித ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய இழப்புகள் ஏற்படலாம். பங்குச் சந்தை தொடர்பான வேலை செய்வோர் இந்த காலகட்டத்தில் சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பதற்றங்கள் சாத்தியமாகும். இந்த நேரத்தில், வீட்டின் எந்த உறுப்பினரின் உடல்நலம் குறித்தும் நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். நீங்கள் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் இருந்தால், அதிக மன அழுத்தம் மற்றும் கோபத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கும்பம் - இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். மேலும், நேரத்தையும் மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். முதலாளி உங்களுக்கு கூடுதல் வேலை வழங்கினால், அதை முடிக்க தயங்காதீர்கள். இல்லையெனில், அது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பெரிய இலாபத்திற்காக சிறிய இலாபத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. இந்த வாரம் மாணவர்களுக்கு மிக நல்ல முடிவுகளை கொடுக்கும். குறிப்பாக நீங்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், உங்கள் வழியில் இருந்துவந்த தடைகள் நீங்கும். இந்த வாரம் பணத்தைப் பொறுத்தவரை சிறப்பானதாக இருக்கும். உங்கள் நிதி சிக்கலை தீர்க்க முடியும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மீனம் - இந்த வாரம் உங்களுக்கு கலவையான முடிவுகளை கொடுக்கும். முதலில், வேலையைப் பற்றி பேசினால், இந்த வாரம் நிதித்துறையில் பணிபுரிவோருக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதி நிலையில் சரிவு ஏற்படலாம். சிந்திக்காமல் செலவு செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் வாழ்க்கைத்துணையுடனான நல்லிணக்கம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் மாறுபட்ட நடத்தை உங்களை தொந்தரவு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு இடையே உள்ள கசப்பை பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கைகள் அல்லது கால்கள் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை